Home /News /tamil-nadu /

இரவில் காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்த காவலர்கள்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா- கோவையில் அதிர்ச்சி சம்பவம்

இரவில் காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்த காவலர்கள்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா- கோவையில் அதிர்ச்சி சம்பவம்

காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்த காவலர்கள் கைது

காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்த காவலர்கள் கைது

Coimbatore : கோவை மாவட்டம் சூலூர் அருகே இரவு நேரத்தில் காரில் பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடியை மிரட்டி 10,000 ரூபாய் பறித்துச் சென்ற முதல் தலைமை காவலர்  மற்றும் ஆயுதப்படை காவலர் ஆகிய  இருவரை சூலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும் ...
கோவை மாவட்டம் சூலூரை  அடுத்த நீலம்பூர் பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றின் அருகே கடந்த திங்கட்கிழமை இரவு காந்திபுரம் பகுதியை சேர்ந்த காதல் ஜோடி காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சாதாரண உடையில் வந்த கருமத்தம்பட்டி தலைமை காவலர் ராஜராஜன் மற்றும் இருவர், ஆயுதப்படை காவலர் ஜெகதீஷ் ஆகிய இருவரும் காதல் ஜோடியை மிரட்டியுள்ளனர்.

இளைஞரை தாக்கவும் செய்துள்ளனர். பின்னர் நடவடிக்கை எடுக்காமல் இருக்க  1 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர் . இதனைநடுத்து காதல் ஜோடி தங்களிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்த நிலையில், இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி அவர்களை அனுப்பியுள்ளனர்.

Must Read: சட்டக் கல்லூரி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை முயற்சி.. செங்கல்பட்டில் பரபரப்பு

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் கருமத்தம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் நேரில் வந்து  புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக சூலூர் போலீசார் தனிப்படை அமைத்து காதல் ஜோடியிடம் பணம் பறித்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். தனியார் ஹோட்டலின் அருகில் இருந்த சிசிடிவி கட்சிகளை ஆய்வு செய்த போது  விசாரணையில் காதல் ஜோடியிடம் பறித்தது கருமத்தம்பட்டி காவல் நிலைய தலைமை காவலர்  ராஜராஜன் மற்றும் ஆயுதப்படை காவலர் ஜெகதீஷ் என்பதும் உறுதியானது.

Must Read : முதல் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. உறவுக்கார பெண்ணுடன் 2-வது திருமணம் -மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

இதனை அடுத்து இருவரையும் போலீசார் விசாரணைக்கு உட்படுத்தினர். அப்போது  தனியாக சிக்கும் காதல் ஜோடிகள் பலரை இதுபோல மிரட்டி பணம் வசூலித்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவலர்கள் இருவர் மீதும் அரசு ஊழியர் சட்டத்தை மீறுதல் ஆபாசமான வார்த்தைகளை பேசுதல்,  காயப்படுத்துதல் 3 பிரிவுகளில் சூலூர் போலீசார்  வழக்குப் பதிவு செய்தனர். பின்னர்  அவர்களை கைது செய்த சூலூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

காவல் துறையினரே  காதல் ஜோடிகளை இரவு நேரத்தில் மிரட்டி பணம் பறித்த சம்பவம்  கோவில் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Suresh V
First published:

Tags: Coimbatore, Crime News, Lovers, Police

அடுத்த செய்தி