மருந்து கடையில் பணிபுரிந்து கொண்டு போதை மாத்திரை விற்பனை - இளைஞர் கைது
மருந்து கடையில் பணிபுரிந்து கொண்டு போதை மாத்திரை விற்பனை - இளைஞர் கைது
போதை மாத்திரை
Coimbatore | கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் தனசேகரன்.இவர் கணபதி பகுதியில் உள்ள மருந்து கடை ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்பவர்களுடனும், அதனை வாங்கும் இளைஞர்களுடனுடம் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
கோவையில் மருந்து கடையில் பணிபுரிந்து கொண்டு இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த தனசேகரன் என்ற இளைஞரை ரத்தினபுரி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஓரு லட்ச ரூபாய் மதிப்புடைய 8,400 மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். இவர் கணபதி பகுதியில் உள்ள மருந்து கடை ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்பவர்களுடனும், அதனை வாங்கும் இளைஞர்களுடனுடம் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மருந்துக்கடைக்கு மருந்து சப்ளை செய்பவர்களிடம் இருந்து மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்துள்ளார். இதில் நல்ல லாபம் வரவே , பணிபுரியும் மருந்து கடையில் இருந்தவாறே போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளார்.
மருந்துக்கடையில் பணிபுரியும் அதே நேரத்தில் போதை மாத்திரை யாருக்கு தேவைப்படுகிறதோ அவர்களுக்கு நேரில் சென்று சப்ளை செய்து வந்துள்ளார். கல்லூரி மாணவர்கள் பலரும் இந்த போதை மாத்திரைகளை வாங்கிச் அதை போதை ஊசியாக மாற்றி செலுத்தி வந்துள்ளனர்.
இதனிடையே ரத்தினபுரி போலீசார் நேற்று ரத்தினபுரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் கஞ்சா விற்பனை தொடர்பாக ரெய்டு நடத்தினர். அப்போது பிடிபட்ட நபர் ஒருவர் போதை மாத்திரைகளை வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது போதை மாத்திரைகளை தனசேகரன் சப்ளை செய்து வருவது தெரியவந்தது. தனசேகரை தனிப்படை போலீசார் கண்காணித்து வந்த நிலையில், கணபதி ஆம்னி பேருந்து நிலையம் அருகே மாத்திரையை சப்ளை வந்த போது அவரை ரத்தினபுரி போலீசார் பிடித்தனர்.
அவரிடம் இருந்து 35 பெட்டிகளில் இருந்து ஓரு லட்ச ரூபாய் மதிப்புடைய 8,400 போதை மாத்திரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தனசேகரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையிலடைத்தனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.