• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆசைவார்த்தை கூறி சிறுவனை திருமணம் செய்த இளம்பெண் - போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீஸ்

ஆசைவார்த்தை கூறி சிறுவனை திருமணம் செய்த இளம்பெண் - போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீஸ்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஆசை வார்த்தை கூறி சிறுவனை திருமணம் செய்த இளம்பெண்ணை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • Share this:
    பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுவனை, கட்டாயப்படுத்தி திருமணம் செய்த 19 வயது இளம்பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பு.

    பொள்ளாச்சி பகுதியில் 19 வயது இளம்பெண் தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார் அந்த பங்கிற்கு அடிக்கடி பெட்ரோல் நிரப்ப வந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுவனை 19 வயது இளம்பெண் காதலிப்பதாக கூறி கடந்த சில தினங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதுபற்றி சிறுவனின் பெற்றோர்களுக்கு தகவல் தெரியவந்ததால் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்ததின் பேரில் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

    Also Read:பெற்ற குழந்தையை மிருகத்தனமாக தாக்கி வீடியோ எடுத்த பெண்.. இணையத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோ

    கடந்த சில தினங்கள் முன்பு சிறுவனுக்கு ஹிரன்யா அறுவை சிகிச்சை செய்வதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவனை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்ற பெண் சிறுவனிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்துச்சென்று கட்டாய திருமணம் செய்து உள்ளார்.

    வீட்டிற்கு வந்த சிறுவனிடம் பெற்றோர் விசாரித்த பொழுது அந்த பெண்ணும் தானும் திருமணம் செய்துகொண்டதாக கூறி உள்ளார்.அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததனர்.புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொள்ளாச்சி மகளிர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் 17 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி இளம்பெண் திருமணம் செய்தது தெரியவந்தது.இதனையடுத்து அந்த 19 வயது இளம்பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    Also Read:  திருமணத்தின்போது மணமகன் செய்த காரியம்.. பளார் விட்ட மணமகள் – வைரலாகும் வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுவரை சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் நபர்கள் மற்றும் கட்டாய திருமணம் செய்யும் நபர்கள் மீது  போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கபட்டு வந்த நிலையில் தற்போது 17 வயது சிறுவனை திருமணம் செய்த பெண் ஒருவர் கோவை மாவட்டத்திலேயே முதல் முறையாக போக்சோவில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: ம.சக்திவேல் (பொள்ளாச்சி)



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: