முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கோவையில் 2-வது நாளாக மருத்துவ மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவையில் 2-வது நாளாக மருத்துவ மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மருத்துவ மாணவர்கள் போராட்டம்

மருத்துவ மாணவர்கள் போராட்டம்

பணி சுமையை குறைக்க கோரி, கோவையில் 2-வது நாளாக மருத்துவ மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கோவை அரசு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை நடத்தாததால் ஏற்படும் பாதிப்பால் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது என மருத்துவ மாணவர்கள் வேதனை தெரிவித்து, கோவையில்  2ஆவது நாளாக மருத்துவ மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்  நடத்தி வருகின்றனர்.

முதுநிலை மருத்துவ மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயின்றவாறே சிகிச்சைகள் அளித்து வருகின்றனர். இதனால் மருத்துவர்களின் பற்றாக்குறை ஈடு கட்டப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு டிசம்பா் மாதம் வரை முதலாம் ஆண்டு மாணவா்கள் வராததால், ஏற்கெனவே இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கு பணி சுமையும், மன உளைச்சலும் அதிகமாகியுள்ளது. எனவே, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து சென்னை, மதுரை, சேலம் கோவை உள்ளிட்ட மருத்துவமனைகளில் மருத்துவர்களாக பணியாற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் கலந்தாய்வை உடனடியாக நடத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்கள் இன்று உள் நோயாளிகள் பிரிவை புறக்கணித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் உடனடியாக கலந்தாய்வை நடத்த வேண்டும், வேலைப்பளுவை குறைக்க வேண்டுமென கோஷமிட்டு வருகின்றனர். தொடர்ந்து அவர்கள், நாங்கள் வேலைகள் மட்டுமே செய்து வருகிறோம் இதனால் படிக்க நேரம் கிடைப்பதில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

மருத்துவ மாணவர்கள் நாங்கள் போராடுவது எங்களுக்காக மட்டுமல்ல நோயாளிகளுக்காகவும் தான் என தெரிவித்துள்ளனர். மேலும் ஆள் பற்றாக்குறையால் அறுவை சிகிச்சைகள் காலதாமதம் ஆகிறது.  இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர் எனவும் தெரிவித்தனர்.

எனவே, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவ மாணவர்கள் கூறும்போது, மிகுந்த பணிச்சுமை மற்றும் மன உளைச்சலில் உள்ளோம். 350க்கும் மேற்பட்டோர் இருக்க வேண்டிய இடத்தில் 250 பேர் தான் இருக்கிறோம்.

Must Read : ஒமைக்ரான் வைரஸ் கண்டறியும் பரிசோதனை முறைகள் என்னென்ன?

அதேபோல, உரிய நபர்கள் இல்லாததால் அறுவைசிகிச்சை காலதாமதம் ஆகிறது. நாங்களும் பாதிக்கப்படுகிறோம். எனவே, வரும் 10ஆம் தேதிக்குள் எங்கள் போராட்டத்திற்கான தீர்வு கிடைக்கவில்லை என்றால் நாங்கள் அவசர சிகிச்சை உட்பட அனைத்து சிகிச்சையையும் புறக்கணிப்போம் என தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் : ஜெரால்டு, கோவை.

First published:

Tags: Coimbatore, Medical Students, Protest