• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கடந்த ஆட்சியில் திமுகவினர் மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக் கோரி காவல்துறை தலைவரிடம் மனு!

கடந்த ஆட்சியில் திமுகவினர் மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக் கோரி காவல்துறை தலைவரிடம் மனு!

கடந்த ஆட்சியில் திமுகவினர் மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக் கோரி அக்தட்சி நிர்வாகிகள் காவல்துறை தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.

  • Share this:
கோவை தொண்டாமுத்தூரில் திமுகவினர் மீது வன்கொடுமை சட்டம் தவறாக போடப்பட்டு இருப்பதாகவும், புகார் கொடுத்த பூங்கொடி பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என வட்டாச்சியர் அறிக்கை கொடுத்துள்ள நிலையில், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என திமுகவினர் மேற்கு மண்டல காவல் துறை தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே தேவராயபுரம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அதிமுக மகளிரணியை சேர்ந்த பூங்கொடி என்பவர் திமுக தொப்பி அணிந்தபடி சென்று ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் பூங்கொடியை அங்கிருந்த திமுகவினர் அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக அதிமுகவை சேர்ந்த பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் திமுகவினர் 4 பேர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

Also read: கோவையில் தனியார் ஹோட்டல் அறையில் அழுகிய நிலையில் பெண் சடலம்.. ’திடுக்’ சம்பவம்!

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்குள்ளானவர்களின் சாதி குறித்த ஆவணங்களை பேரூர்  வட்டாச்சியரிடம், பேரூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் இருந்து கேட்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சாதி தொடர்பான ஆவணங்களை சரி பார்த்தபோது வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் கொடுத்த அதிமுகவைச் சேர்ந்த பூங்கொடி , தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் இல்லை எனவும், கிறிஸ்தவர் என்பதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் (bc) என பேரூர் வட்டாட்சியர் அறிக்கை அளித்து இருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனையடுத்து இன்று  திமுகவினர் பேரூர் வட்டாட்சியர் அளித்த அதிமுகவை சேர்ந்த பூங்கொடியின் சாதி குறித்த அறிக்கையுடன் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகரிடம் இன்று மனு அளித்தனர். திமுகவினர் மீது  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தவறாக வழக்கு போடப்பட்டு இருப்பதாகவும் உடனடியாக அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனு அளித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் அழுத்தம் காரணமாகவே திமுகவினர் மீது வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், அவர் மீதும், பொய் புகார் அளித்த பூங்கொடி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கு மண்டல காவல்துறை தலைவரிடம் திமுகவினர் வலியுறுத்தியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: