• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 4 மாதங்களுக்குப் பிறகு நாளை முதல் மீண்டும் திரையரங்குகள் திறக்க அனுமதி - தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்!

4 மாதங்களுக்குப் பிறகு நாளை முதல் மீண்டும் திரையரங்குகள் திறக்க அனுமதி - தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்!

4 மாதங்களுக்குப் பிறகு நாளை முதல் மீண்டும் திரையரங்குகள் திறக்க அனுமதி - தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்!

4 மாதங்களுக்குப் பிறகு நாளை முதல் மீண்டும் திரையரங்குகள் திறக்க அனுமதி - தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்!

4 மாதங்களுக்குப் பிறகு நாளை முதல் மீண்டும் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

  • Share this:
    நாளை முதல் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் திரையரங்குகளில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியில் திரையரங்கு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் நிலை காரணமாக கடந்த 3 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று தமிழக அரசு திரையரங்குகள் திறப்பதற்கான அனுமதி அளித்ததுடன் அதற்கான கட்டுப்பாட்டு விதிகளையும் அறிவித்திருந்தது. இதனடிப்படையில் கோவையில் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் இருக்கைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    குறிப்பாக படம் பார்க்க வரும் வாடிக்கையாளர்களை சமூக இடைவெளி விட்டு அமரும் விதமாக இருக்கைகளில் குறியீடுகள் அமைப்பது, கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Also read: பள்ளி திறப்பு குறித்த உத்தரவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்க - முன்னாள் அமைச்சர்

    இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர் பாலசுப்ரமணியம் கூறும்போது, கடந்த கொரோனா அலை பரவல் காரணமாக 18 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த 4 மாதங்கள் மூடப்பட்டு பல கோடி ரூபாய் நஷ்டத்தால் திரையரங்கு உரிமையாளர்கள் பாதிக்கபட்டனர்.

    இந்த சமயத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என்ற அரசின் அனுமதியை அடுத்து, சுமார் 13 பணியாளர்களை கொண்டு திரையரங்கு முழுவதும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டதாக தெரிவித்தவர். மேலும் படம் பார்க்க வரும் வாடிக்கையாளர்களை முக கவசம் அணிவது சமூக இடைவெளி பின்பற்றுவது மற்றும் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ்கள் போன்றவற்றை சரி பார்ப்பது என பாதுகாப்பு நடவடிக்கைகள் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும்  திரையரங்கு டிக்கெட் கட்டணம் என்பது உயர்த்தபடாது என தெரிவித்தவர் அரசு அறிவுறுத்திய கட்டுப்பாட்டு விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படும் என்றார். மேலும் கொரனா அலை பரவல் காரணமாக நஷ்டத்தை சந்தித்துள்ள திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக அரசு புதிதாக விதித்துள்ள வரி மற்றும் கேளிக்கை வரி உள்ளிட்ட வரிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: