கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரெமிடிசிவிர் மருந்து கிடைக்காததால் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம்...!

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

மருத்து சீக்கிரமே காலியாகி போனதால், நீண்ட நேரம் வரிசையில் நின்ற சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரெமிடிசிவிர் மருந்து வாங்க ஏராளமானோர் குவிந்து இருந்த நிலையில், மருந்து கிடைக்காததால் 100க்கும் மேற்பட்டோர் தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்துகள் விற்பனை நேற்று முன்தினம் தொடங்கியது. முதற்கட்டமாக வந்தடைந்த 500 வயால் ரெமிடெசிவர் மருந்துகள் முதல் நாளிலேயே விற்றுத் தீர்ந்தன. இந்த நிலையில் நேற்று மருந்து வாங்க உரிய ஆவணங்களுடன்
மருத்துவக் கல்லூரிக்கு வந்தவர்களுக்கு டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டன.

இந்த நிலையில் மருந்து வாங்க ஏராளமானோர் இன்று அதிகாலை 6 மணி முதல் மருத்துவக்கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் 300 க்கும் மேற்பட்டோர் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர். இரண்டாவது கட்டமாக இன்று வந்தடைந்த 560 வயால் ரெம்டெசிவிர் மருந்துகள், ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டர்களுக்கு முதலில் விற்பனை செய்யப்பட்டது. ஒரு வயால் ரெமிடெசிவிர் 1568 ரூபாய்க்கும், 6 வயால் 9704 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Also read... Covid-19: தமிழகத்தில் ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மருத்து சீக்கிரமே காலியாகி போனதால், நீண்ட நேரம் வரிசையில் நின்ற சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தீடீரென 100க்கும் மேற்பட்டவர்கள் மருந்து கிடைக்கவில்லை என் கூறி கல்லூரி வாசலில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்தனர். தீடீர் மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: