Home /News /tamil-nadu /

கோவையில் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாகா நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு!

கோவையில் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாகா நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு!

கைது செய்யப்பட்டவர்கள்

கைது செய்யப்பட்டவர்கள்

முற்றுகை மற்றும் மறியல் போராட்டம் காரணமாக விளாங்குறிச்சி சாலையில் போராட்டம் நடத்தியதால் பதட்டமான சூழல் நிலவியது.

  • News18
  • Last Updated :
கோவை விளாங்குறிச்சி அருகே தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாகா நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட தபெதிக உட்பட பல்வேறு அமைப்பை சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை விளாங்குறிச்சி அருகே உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிக் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஷாகா நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியினை தடை செய்ய வலியுறுத்தி இன்று காலை பள்ளியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதி தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தை,மக்கள் அதிகாரம் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 25 க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.



போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் சாலையில் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து
போராட்டத்தில் ஈடுபட்ட தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணனை உட்பட 25 பேரை காவல் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

Also read... நோய் ஏற்படுத்தும் பிரதான வைரஸாக வேகம் எடுக்கும் ஒமைக்ரான்...! 

Also read... சளி, காய்ச்சல் மட்டுமே இருந்தது... முதல் இரண்டு அலைகளில் பாதிக்கப்படவில்லை - ஒமைக்ரான் தொற்றிலிருந்து மீண்டவர் பேட்டி!

முற்றுகை மற்றும் மறியல் போராட்டம் காரணமாக விளாங்குறிச்சி சாலையில் போராட்டம் நடத்தியதால் பதட்டமான சூழல் நிலவியது. தொடர்ந்து மற்ற அமைப்புகளை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு வருகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Coimbatore

அடுத்த செய்தி