Home /News /tamil-nadu /

கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் வங்கி கணக்கிலிருந்து மாயமான 8.5 லட்சம்- சிக்கிய வடநாட்டு ஊழியர்கள்

கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் வங்கி கணக்கிலிருந்து மாயமான 8.5 லட்சம்- சிக்கிய வடநாட்டு ஊழியர்கள்

அதுல்ஜோஷி மற்றும் ராஜ் பெங்கான்

அதுல்ஜோஷி மற்றும் ராஜ் பெங்கான்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை  சேர்ந்தவர் முருகசாமி. இவருடைய மனைவி யசோதா. கடந்த ஆண்டு மே மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட யசோதா சிகிச்சைக்காக, கோவை சிட்ரா  பகுதியில் உள்ள கே.எம்.சி.எச்  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
கோவை KMCH மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று உயிரிழந்த பெண்ணின் ஏடிஎம் கார்டை திருடி 8.5 லட்சம் பணத்தை திருடிய அசாம் மாநிலத்தை சேர்ந்த இரு  ஊழியர்களை பீளமேடு போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை  சேர்ந்தவர் முருகசாமி. இவருடைய மனைவி யசோதா. கடந்த ஆண்டு மே மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட யசோதா சிகிச்சைக்காக, கோவை சிட்ரா  பகுதியில் உள்ள கே.எம்.சி.எச்  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில்  யசோதாவின்  வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக சமீபத்தில் முருகசாமி  வங்கிக்கு சென்றுள்ளார்.

அப்போது யசோதாவின் வங்கி கணக்கை ஆய்வு செய்த போது, அதிலிருந்த 8.5 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து முருகசாமி அந்த பணம் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது,  யசோதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்த 2021 மே மாதத்திற்கு பிறகு ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து சந்தேகமடைந்த முருகசாமி உடனடியாக கோவை பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பீளமேடு போலீசார் கே.எம்.சி.எச் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர். யசோதா அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது அறையை அடிக்கடி சுத்தம் செய்யும் பணியில் இருந்த  அசாம் மாநிலத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் அதுல்ஜோஷி மற்றும் ராஜ் பெங்கான் ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Also read... மாமூல் தர மறுத்த வளையல் கடை உரிமையாளர் மீது தாக்குதல் - அதிமுக பெண் நிர்வாகி கைது

விசாரணையில் யசோதா  இறந்த நிலையில், அவரதுஏடிஎம் கார்டை அறையில் தவற விட்டு சென்று இருந்ததும், அந்த ஏடிஎம் கார்டில் பாஸ்வேர்டு எண்ணும் எழுதப்பட்டு இருந்ததால், அதை பயன்படுத்தி  8,67,710 ரூபாய் திருடியதை ஒப்புக்கொண்டனர். பல தவணைகளில் ஏடிஎம் கார்டை வைத்து பணத்தை எடுத்ததும் விசாரணையில்  தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Coimbatore, Crime News

அடுத்த செய்தி