Home /News /tamil-nadu /

“கொடை வள்ளல் ஸ்டாலின் ரூ.5,000 கொடுக்க வேண்டும்” - ஓபிஎஸ் பேச்சு

“கொடை வள்ளல் ஸ்டாலின் ரூ.5,000 கொடுக்க வேண்டும்” - ஓபிஎஸ் பேச்சு

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

O Panneerselvam : சட்டமன்ற தேர்தலின் போது திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்பினார்கள் எனவும், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்த கட்சி திமுக எனவும்  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்கவும் ...
கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில்  போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சிவானந்தா காலனியில் நடைபெறும் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு  பிரச்சாரம் மேற்கொண்டார். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும், கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் இதில்  பங்கேற்றனர்.

இந்த  பிரச்சார கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்டம் அதிமுவின் கோட்டை என தெரிவித்தார். பல திட்டங்களை கடந்த ஆட்சியில் செய்தோம் எனவும், ஆனால் இந்த 9 மாதத்தில் புதிய அரசு வந்த பின் எந்த பணியும் நடைபெற வில்லை, கோவை மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் எந்த பணியும் நடைபெற வில்லை என தெரிவித்தார். விளம்பரத்தால் மட்டும் இந்த ஆட்சி செயல்பட்டு கொண்டு இருக்கின்றது எனவும் அதிமுக ஆட்யில் துவங்கிய பணிகளை இந்த அரசு முடக்கி இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் அனைத்து பதவிகளையும் பிடிக்கின்றோம் என தெரிவித்த அவர், திமுகவினர் எல்லா வீடுகளையும் கணக்கெடுத்து பணம் கொடுக்க  வருகின்றனர், கொலுசுவுடனும் சென்று  இருக்கின்றனர் என தெரிவித்தார். காவல் துறையை பார்த்து பயப்பட மாட்டோம் என தெரிவித்த அவர், காவல் துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும், பழைய வழக்குகளை தூதசு தட்டி அதிமுகவினரை காவல் துறை  மிரட்டுகின்றனர் எனவும்மீண்டும் சட்டமன்ற தேர்தல் வந்தால் அதிமுக ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார். காவல் துறையினர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும், நிலைமை கண்டிப்பாக மாறும், காவல் துறை திமுக்காரன் மாதிரி வேலை பார்க்கின்றது எனவும் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.

இதனை தொடர்ந்து பேசிய அதிமுக ஓருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கொங்கு மண்டலம் இன்று வரை அதிமுகவின் எஃகு கோட்டையாக இருந்து வருகின்றது எனவும், கோவை வ.உ.சி திடலில் 2011ல் நடத்திய  பிரமாண்டமான கூட்டம் நடத்தியது அதிமுக ஆட்சி அமைக்க அஸ்திவாரமாக அமைந்தது எனவும் தெரிவத்தார். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் எண்ணங்களை ஒருங்கே பெற்றவர் ஜெயலலிதா எனவும் மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்தவர் எனவும், 5.5 லட்சம் வீடுகளை மக்களுக்கு கட்டிகொடுத்தவர் அவர் எனவும், இந்த திட்டங்கள் மக்கள் மனதில் அசைக்க முடியாத திட்டங்களாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தடம் பிறழாமல் அவரை தொடர்ந்து செய்து காட்டியது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு எனக்கூறிய அவர், தமிழகத்தில் 52 சதவீத மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல வித்திட்டவர் ஜெயலலிதா எனவும் தெரிவித்தார். கொரொனா தொற்றை அதிமுக அரசு சிறப்பாக பையாண்டது எனவும் ஆனால் திமுக அரசு அதை சரியாக கையாளவில்லை எனவும் குற்றம்சாட்டினார். 10 ஆண்டுகளாக சிறப்பான அதிமுக ஆட்சி நடைபெற்றது எனவும், காவேரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் போராடி  தீர்ப்பனை கொண்டு அரசாணை  பெற்றுக்கொடுத்தவர் ஜெயலலிதா எனவும் தெரிவித்த அவர், எந்த குறையும் சொல்ல முடியாத ஆட்சியாக அதிமுக ஆட்சி இருந்தது எனவும், 50 ஆண்டுகளில் இல்லாத சாதனையை 5 ஆண்டுகளில் கோவை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அதிமுக செய்து காட்டியது எனவும் தெரிவித்தார்.

Read More : ஹிஜாப் அணிந்து தேர்தல் பிரச்சாரம் செய்த அதிமுக வேட்பாளர்

சட்டமன்ற தேர்தலின் போது திமுக பொய் வாக்குறுதிகளை கொடுத்தது எனவும், 505 வாக்குறுதிகளை திமுக வீதி வீதியாக பிரச்சாரம் செய்தது, அதை மக்கள் நம்பினார்கள் என கூறிய அவர் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்  மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்த கட்சி திமுக எனவும் குற்றம்சாட்டினார். முதல் கையெழுத்து நீட் என்றார்கள், இன்னும் செய்யவில்லை எனவும் 5 சவரனுக்குள் நகை அடகு வைத்தால் கடன் தள்ளுபடி என்றார்கள், 50 லட்சம் பேர் நகை அடகு வைத்தனர், இப்போது யாருக்கு தகுதி என ஆய்வு செய்து வருகின்றனர் என்றும், 37 லட்சம் பேர் நகை அடகு வைத்து நடுத்தெருவில்  இருக்கின்றனர், 13 லட்சம் பேர் மட்டும் இப்போது தகுதி என்கின்றனர் எனவும் கூறினார்.

பெண்களுக்கு 1000 ரூபாய் வீடு தோறும் உதவி தொகை வரவில்லை,  கடுமையான கோபத்தில் மக்கள் இருக்கின்றனர் எனவும் தெரிவித்த ஓபிஎஸ், 2500 ரூபாயுடன் பரிசு தொகுப்பை அதிமுக அரசு கொடுத்தது, கொடை வள்ளல் ஸ்டாலின் 5000 கொடுக்க வேண்டும் என்றார். இப்போது அவர் எதுவும் கொடுக்கவில்லை எனக்கூறிய அவர், பொங்கல் பரிசு பெருட்களை வடநாட்டில் இருந்து வாங்கி இருக்கின்றனர், இங்கு வாங்கினால் தெரிந்து விடும் என வட மாநிலத்தில் வாங்கி இருக்கின்றனர் எனக்கூறிய அவர், பொங்கலுக்கு மக்களுக்கு கொடுத்த அரிசியை மாட்டிற்க்கு போட்டால்  அந்த மாடு நம்மை முறைக்குது எனவும் தெரிவித்தார்.

Must Read : பொய் பேசுவதில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு, உதயநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம் - எடப்பாடி பழனிசாமி

பொங்கல் பரிசு பொருட்களின் தரம் குறித்து விசாரணை கமிசன் அமைத்து விசாரணை செய்ததில் அது உண்மை என நிரூபணம் ஆகியிருக்கின்றது எனக்கூறிய ஓபிஎஸ், பெரியார் கண்ட கனவை நனவாக்கியது ஜெயலலிதா மட்டு்ம்தான், உள்ளாட்சி பதவிகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது ஜெயலலிதா எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளையும் அதிமுக கைப்பற்றும் எனவும் மக்கள் தற்போது பிரித்து பார்க்க துவங்கி விட்டனர், அதிமுக ஆட்சிதான் சிறந்தது என்பதை மக்கள் புரிந்து கொண்டனர் என்றார்.

தொடரந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம்,  நமக்கு ஏற்பட்ட சின்ன சரிவால் வெற்றி வாய்ப்பை இழந்தோம், இப்போது இயற்கையே அதை  சரி செய்துவிட்டது எனவும்தமிழகத்தில் ஆரோக்கியமான சூழல் உருவாகி இருக்கின்றது, மக்கள் நம்மை ஆதரிக்க தயாராக இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
Published by:Suresh V
First published:

Tags: ADMK, Local Body Election 2022, O Panneerselvam, OPS

அடுத்த செய்தி