கோவை காந்திபுரம்
பெரியார் படிப்பகத்தில் நேற்று பிற்பகல் அனைத்து முற்போற்கு இயக்க கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த கூட்டமைப்பின் சார்பில் தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக மக்களின் நலனுக்காக தமிழக அரசு நிறைவேற்றிய 19 மசோதாக்களை தமிழக ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார் எனவும், கல்வி உரிமைகளில் ஆளுநர் தலையிட்டு வருவதாகவும்
குற்றம் சாட்டினார்.
நீட் உட்பட பல்வேறு விவகாரங்களில் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருப்பதாகவும், தமிழக மக்களின் வரி பணத்தில் செயல்படும் ஆளுநர் மாளிகை, சனாதான மையமாக மாறி வருகின்றது எனவும் தெரிவித்தார். மாநிலங்கள் வலிமை பெறக்கூடாது என்ற கருத்தை தமிழக ஆளுநர் வலியுறுத்தி வருவதுடன், பல்கலை கழகங்களை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றார் எனவும் தெரிவித்தார்.
தமிழக மக்களுக்கு எதிராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருவதாகவும், எனவே தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் நாளை (இன்று) மதியம் கோவை விமான நிலையம் வரும் தமிழக ஆளுநர். ஆர்.என். ரவிக்கு கோவை விமான நிலையத்தில் அனைத்து முற்போற்கு இயக்கங்கள் சார்பில் கருப்புகொடி காட்டப்படும் என கு.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பு
Must Read : கொரோனாவை போல் சமஸ்கிருதம் உருமாறி நீட் தேர்வாக வந்துள்ளது: கி.வீரமணி
சென்னா ரெட்டி ஆளுநராக இருந்த போது அவரை தாக்கிய அதிமுகவினர், இப்போது ஆளுநருக்கு ஆதரவாக பேசுகின்றனர் எனக்கூறிய அவர், தமிழக ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள மான்கள் குறித்து கூட வனத்துறையால் கேள்வி எழுப்ப முடியாத நிலை இருந்து வருகின்றது எனவும், தபெதிக பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, பல்வேறு முற்போக்கு அமைப்புகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.