கோவையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு எதிர்ப்பு

கோவையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு எதிர்ப்பு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து போராட்டம்

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நடைபாதையினை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாற்றியமைப்பதையும், மரங்கள் வெட்டப்படுவதையும்  கண்டித்து ந்நடைபயிற்சியில் ஈடுபடுபவர்கள் இன்று கருப்பு உடை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இயற்கை சூழல் பாதிக்கப் படாமல் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 • Share this:
  கோவையின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது ரேஸ்கோர்ஸ் பகுதி. 150 ஆண்டுகளாக இயற்கை சூழலுடன் இருக்கும் இந்த பகுதி நடைபாதையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்த பாரம்பரிய அடையாளம் கொண்ட ரேஸ்கோர்ஸ்  பகுதியை, தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புணரமைக்கும் பணிகளானது நடைபெற்று வருகின்றது.

  இதற்காக வட்டவடிவலான சாலையில் மாற்றம், அலங்கார விளக்குகள், சாலைகளில் தடை போன்றவை ஏற்படுத்தபடுவதுடன், புனரமைப்பு பணிகளுக்காக பல இடங்களில் இருந்த சிறிய பூங்கா மற்றும் மரங்கள் போன்றவை அகற்றப்படுகின்றன.

  மேலும் ரேஸ்கோர்ஸ் நடைபாதை வடிவத்தை மாற்றி இயற்கை சுழலை மாற்றி வணிக நோக்கத்துடன் ஸ்மார்ட்சிட்டி பணிகள் நடப்பதை கண்டித்து, அந்த சாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள் கையெழுத்து இயக்கம் மூலம் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் இன்று இயற்கை சூழல் அழிக்கப்படுவதை கண்டித்தும், பழைய படியே ரேஸ்கோர்ஸ் வடிவம் இருக்கும் படி சாலைகளை அமைக்க வலியுறுத்தியும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் இன்று கருப்பு உடை  அணிந்து அரசிற்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.

  ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து போராட்டம்


  மேலும் நடைபயிற்சி மேற்கொண்ட ஆண்களும், பெண்களும் கருப்பு உடைகளுடனும், கையில் கருப்பு பட்டை அணிந்தபடியும் தங்களது எதிர்பை தெரிவித்தனர். ஸ்மார்ட்சிட்டி திட்டம் மூலம் ரேஸ்கோர்ஸ் பகுதியின் அடையாளம் அழிக்கப்படுகின்றது எனவும் தற்போது பாரம்பரியமிக்க ரேஸ்கோர்ஸ் அடையாளத்தையே மாற்றி விட்டனர் எனவும் சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

  கலர் கலராக விளக்குகள் போட்டு பார் மாதிரி ஆக்கியிருக்கின்றனர் எனவும், இதற்கு 40 கோடி ரூபாயை செலவு செய்வதை விட வேறு இடத்தில் புதிய நடைபயிற்சி தளத்தையே அமைக்கலாம் எனவும், சூழல் மாற்றியமைப்பதை கண்டித்து இன்று கருப்பு உடை அணிந்து  எதிர்ப்பை தெரிவித்துள்ளோம் எனவும் பழையபடி ரேஸ்கோர்ஸ் பழைய தோற்றத்தில் இருக்கும்படி மாற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் நிலவும் சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

  மேலும் படிக்க... இரவு நேர ஊரடங்கு: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட பயணிகள்

  ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் என்ன பணிகள் செய்கின்றனர் என்பது குறித்து வெளிப்படையாக  வெளியிடப்பட வில்லை என்றும், என்ன பணிகள் நடக்கிறது என்பதே தெரியாமல் இருப்பதாகவும் சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.  ரேஸ்கோர்ஸ் என்ற இயற்கை சூழல் அமைப்பை சீர்குலைக்கும் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு  எதிராக இன்று நடைபெற்ற கருப்பு சட்டை எதிர்ப்பு நடை பயணத்தில் கோவை நகரில் உள்ள முக்கிய தொழில் முனைவோர்கள்,  அரசியல் கட்சியினர், இளைஞர்கள் என பல தரப்பினர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பினை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்: சு.குருசாமி, கோவை  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: