முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நீலகிரியில் கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையை கடந்த புலி - வைரலாகும் வீடியோ

நீலகிரியில் கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையை கடந்த புலி - வைரலாகும் வீடியோ

புலி சாலையை கடக்கும் காட்சி

புலி சாலையை கடக்கும் காட்சி

Nilgiris | புலி சாலையை கடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது

  • 1-MIN READ
  • Last Updated :

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் செல்லும்  சாலையை கண்ணிமைக்கும் நேரத்தில் புலியின் கடந்து செல்லும் செல்போன்  காட்சிகள்  வைரலாகி வருகின்றது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அடர் வனப்பகுதிகளில் புலி , யானை, காட்டுமாடு, கரடி, சிறுத்தை, மான்  உள்ளிட்ட பல்வேறு  வனவிலங்குகள்  காணப்படுகின்றன. இவற்றில் யானை, மான்கள் போன்றவை  அவ்வப்போது சாலையோரங்களில் மேய்ச்சலில் ஈடுபட்டு வருவது வழக்கம். சிறுத்தை, புலி, கரடி போன்ற வனவிலங்குகள் அரிதாக  தென்படும்.

Also Read: இந்த படத்தை பார்த்ததும் முதலில் உங்கள் கண்களுக்கு தெரிவது என்ன?

இந்த நிலையில் நேற்று மசனகுடியிலிருந்து முதுமலை செல்லும் பிரதான சாலையில் புலி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையை கடந்து சென்றது. இதை அந்த வழியாக சென்ற வாகனஓட்டி ஒருவர்  படம் பிடித்துள்ளார். சாலையின் ஓரத்தில் புலி இருப்பதை கவனித்த அந்த நபர் தனது வாகனத்தை மெதுவாக நிறுத்தியுள்ளார். அப்போது  கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையை கடந்து காட்டுப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும் பகுதி என்பதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

First published:

Tags: Coimbatore, Nilgiris, Ooty, Tiger, Viral Video