ஒன்றரை வயதில் பெரியார் முதல் ட்ரம்ப் வரை அடையாளம் காட்டும் குழந்தை: இரு சாதனை புத்தகங்கள் இடம் பிடிப்பு

மழலை மொழியில் பேசி இரு சாதனை புத்தகங்களில் இடம் பிடித்த ஓன்றரை வயது குழந்தை!

கோவையில் ஓன்றரை வயது பெண் குழந்தை தனது அபார நியாபக சக்தியால் சமன்பாட்டு குறியீடுகள், பிரபல நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள், நாடுகளின் தலைநகரங்கள் போன்றவற்றை சொல்லி அசத்தி வருகின்றது.

  • Share this:
ஒன்றரை வயதிலேயே இரு சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளார் 20 மாதமே ஆன குழந்தை பிரியஹாசினி.

கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த கோபிநாத் - நிஷாந்தினி  தம்பதியினரின் ஒன்றரை வயது மகள் பிரியஹாசினி.  20 மாதங்களே ஆன இக்குழந்தை தனது நினைவாற்றலால் அனைவரையும் கவர்ந்து வருகின்றார். நாடுகளின் பெயர்கள், மாநிலங்களின் தலைநகரங்கள், சமன்பாட்டு குறியீடுகள், சதுரங்ககதாபாத்திரங்கள், பிரபல நிறுவனங்கள் பெயர்கள் என அனைத்தையும் சொல்லி கவர்ந்து வருகின்றார்.

Also read: கீழடியில் கிடைத்த வெள்ளிக் காசு: புகைப்படத்தை வெளியிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

அண்ணா, பெரியார் போன்ற தமிழக தலைவர்கள் முதல் பேட்மேன் போன்ற கதாபாத்திரங்களையும், அமெரிக்க முன்னாள் அதிபர்  டிரம்ப் வரை அனைத்து தலைவர்களையும் புகைபடங்களை காட்டினாலே பெயர்களை சொல்லி அசத்தி வருகின்றார்.சிரிப்பு, சோகம், ஆச்சரியம், அழுகை போன்ற உணர்வுகளை முகபாவணைகளாக மாற்றி காட்டியும் அனைவரின் கவனத்தை குழந்தை பிரியஹாசினி கவர்ந்து வருகின்றார். குழந்தைக்கு எந்த விதத்திலும் அழுத்தம் கொடுக்க கூடாது என்பதை முதலிலேயே  முடிவு செய்தோம் என தெரிவிக்கும் பிரியஹாசினியின் தந்தை கோபிநாத், பெற்றோர்களை பார்த்துதான் குழந்தைகள் அனைத்தையும் செய்வார்கள் என்பதால் எங்கள் செயல்களின் மூலம் குழந்தைக்கு பல விஷயங்களை உணர்த்தியதாகவும் தெரிவிக்கின்றார்.

குழந்தை முன்பு புத்தகங்களை படிக்கும் போது, குழந்தைக்கும் புத்தகங்கள் பிடித்து போயிருக்கின்றது எனவும், அதில் இருந்து குழந்தைக்கு எதுவெல்லாம் சொல்லி கொடுக்க முடியுமோ அதை சொல்லி கொடுத்தாகவும், இதனால் இரு விருதுகளை குழந்தை பிரியஹாசினி வாங்கி இருப்பதாகவும் தந்தை கோபிநாத் கணேசன் தெரிவித்தார்.

Also read: கர்நாடக முதல்வர் பசவராஜைக் கண்டித்து தமிழக பாஜகவினர் உண்ணாவிரதம்: அண்ணாமலை அதிரடி

குழந்தைக்கு ஒரு வயது வரை எதுவும் சொல்லி கொடுக்கவில்லை எனவும் புத்தகங்களை அவர் கண் முன் வைத்திருப்பதால் அவருக்கு புத்தகங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது எனவும் புத்தகங்களில் உள்ள படங்களை பார்ப்பதில் இருந்து அவரின் மனதில் பதிந்து விடுவதாகவும் தெரிவிக்கும் தாய் நிவேதிதா, குழந்தையிடம்  நிறைய பேசுவதும் அவர் மனதில் அழுத்தமாக பதிந்து விடுவதாகவும் தெரிவிக்கின்றார். குழந்தைகளிடம் அதிகம் பேச பேச நிறைய தெரிந்து கொள்கின்றார்கள் எனவும் குழந்தையின் தாய் நிஷாந்தினி  தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழந்தை விளையாட்டு பொம்மை  பொருட்களை விட புத்தகத்தை ஆர்வமாக எடுப்பார் எனவும், அதில் அவருக்கு ஆர்வமாக இருப்பது தெரிந்தது எனவும், குழந்தைக்கு கவனிக்கும் திறன் அதிகமாக இருப்பது தெரிய வந்ததால் அவளை அக்கறை எடுத்து வீட்டில் அனைவரும் சொல்லி கொடுத்து வருவதாகவும் குழந்தையின் தாத்தா தெரிவிக்கின்றார்.

ஓன்றரை வயது குழந்தை பிரியஹாசினி தனது ஆபார நினைவாற்றல் காரணமாக இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய சாதனைகளை பதிவு செய்யும் நிறுவனங்களிடம் இருந்து இரு விருதுகளை பெற்று சாதனை எண்ணிக்கையினை முளையிலேயே துவங்கிள்ளார்.
Published by:Esakki Raja
First published: