திமுக நிர்வாகிகள் யாரும் தடுப்பூசி டோக்கன் வினியோகத்தில் ஈடுபட மாட்டார்கள்: அமைச்சர் சக்கரபாணி

திமுக நிர்வாகிகள் யாரும் தடுப்பூசி டோக்கன் வினியோகத்தில் ஈடுபட மாட்டார்கள்: அமைச்சர் சக்கரபாணி

கோவைக்கு சிறப்பு கவனம் செலுத்தி கொரோனா நோய்த்தொற்று கட்டுபடுத்தப்பட்டுள்ளது எனவும், கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கோவையை  மாற்றுவதற்கு பணி செய்து வருகிறோம் என்றார்.

  • Share this:
தடுப்பூசிகளுக்கு வழங்கும் டோக்கன்களில் முறைகேடு எதுவும் நடப்பதில்லை எனவும் திமுக நிர்வாகிகள் யாரும் டோக்கன் வினியோகத்தில் ஈடுபட மாட்டார்கள் என உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு பின்கவனிப்பு புறநோயாளிகள் பிரிவு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கான தடுப்பூசி முகாம், ஆக்சிஜன் உற்பத்திப் பிரிவு,  குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம் ஆகியவற்றை உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இன்று துவக்கி வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் சமீரன், மருத்துவமனை டீன் நிர்மலா ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, கோவைக்கு சிறப்பு கவனம் செலுத்தி கொரோனா நோய்த்தொற்று கட்டுபடுத்தப்பட்டுள்ளது எனவும், கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கோவையை  மாற்றுவதற்கு பணி செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

மேலும் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு தன்னார்வ அமைப்புகள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர் என தெரிவித்த அவர்,  கொரோனா நோய்த்தொற்றுக்கு பிறகு உளவியல் மற்றும் உடல் ரீதியான பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளிக்க சிறப்பு  வார்டை திறந்து வைத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

கோவையில் இது வரைக்கும்  9 லட்சத்து 57 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது எனவும் சென்னைக்கு அடுத்தாபடியாக கோவைக்கு தான் அதிக தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

Also read: காவல்துறையில் வேலை கிடைத்தாலயே ஒலிம்பிக்கிற்கு தேர்ச்சி பெற முடிந்தது - தடகள வீரர் நாகநாதன் உருக்கம்

தடுப்பூசி போடுவதற்கு  மக்கள் முதலில் அச்சம் பட்டார்கள் எனவும்,  ஆனால் இப்போது தடுப்பூசி போட ஆர்வமாக உள்ளனர் என தெரிவித்த அவர், மத்திய அரசு ஒதுக்கும் தடுப்பூசிகளை தாமதம் படுத்தாமல் உடனடியாக மக்களுக்கு  செலுத்தி வருகிறோம் என்றார்.

தடுப்பூசிகளுக்கு வினியோகம் செய்யும் டோக்கன்களில் முறைகேடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சக்கரபாணி,  தடுப்பூசிக்கு டோக்கன் திமுக நிர்வாகிகள் கொடுக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் சுகாதரத்துறை பணியாளர்கள் தான் தடுப்பூசி மற்றும் டோக்கன் விநியோகம் செய்கிறார்கள் என்றும் தெரிவித்தார். திமுக நிர்வாகிகள் யாரும் டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபட மாட்டார்கள் எனவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
Published by:Esakki Raja
First published: