கோவைக்கு ஓன்றரை வருடத்தில் புதிய  மாஸ்டர் பிளான்: அமைச்சர் முத்துச்சாமி தகவல்

அமைச்சர் முத்துச்சாமி

ஆட்டோ நகரம் என்ற ஏற்பாடும் செய்யப்படுகின்றது என தெரிவித்த அமைச்சர் முத்துச்சாமி, பெருந்துறை, திருச்செங்கொடு பகுதிகளில் இந்த நகரம் உருவாக்கினால் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

  • Share this:
கோவையின் பழைய மாஸ்டர் பிளானில் 1211 சதுர கி.மீ இருந்த நிலையில், கூடுதலாக 1658 சதுர கி.மீ இதில் சேர்க்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளில் புதிய மாஸ்டர் பிளான் வெளியிடப்படும் என வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்தார்.

கோவையில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துச்சாமி  கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்தார்.

பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு  அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, என்னென்ன பணிகள் மாற்றம் செய்யவேண்டும், துரிதப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோனை நடத்தப்பட்டது என தெரிவித்தார்.

Also Read:  பெண் தோழியிடம் பேசுவதை தாய் கண்டித்ததால் தற்கொலை செய்த புதுப்பெண்!

தேர்தல் அறிக்கையில் சொன்னபடி துணை நகரம் அமைக்க ஏற்பாடு செய்யப்படுகின்றது எனவும்,  அது முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகின்றோம் என கூறிய அவர், அதுமாடல் நகரமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றோம் என தெரிவித்தார். ஆட்டோ நகரம் என்ற ஏற்பாடும் செய்யப்படுகின்றது என தெரிவித்த அவர், பெருந்துறை, திருச்செங்கொடு பகுதிகளில் இந்த நகரம்  உருவாக்கினால்  பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Also Read:  பெண் ஊராட்சி மன்ற தலைவரை சாதி ரீதியில் திட்டி வம்பிழுத்ததால் பதற்றம்!

மேலும் வீட்டுவசதி வாரியத்திடம் பொது மக்கள்  வீடுகளை வாங்க நீண்ட நாட்களுக்கு பின், தற்போது அவை பழுதடைந்துள்ள நிலையில் கட்டிடங்களை மீண்டும் புணரமைக்க வேண்டும் என்று கேட்பதாகவும்,  அதில்  பழுதடைந்த  சில இடங்களை தேர்வு செய்து வருகின்றோம் எனவும் தெரிவித்தார். பத்திரபதிவு செய்யாமல், டாக்குமென்ட் கொடுக்கப்படாமல் இருப்பவர்களுக்கு விரைவில் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

சட்டத்திற்கு புறம்பாக இனி புதிதாக கட்டிடங்கள் எதுவும் இருக்க கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கின்றார் எனவும், சட்ட விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க தனி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்கனவே கோவையின் மாஸ்டர் பிளான் 1211 சதுர கி.மீ பரப்பளவில் இருந்தது எனவும், இதில் கூடுதலாக1658 சதுர கி.மீ சேர்க்கப்படுகின்றது எனவும் ஒன்றரை ஆண்டுகளில் புதிய மாஸ்டர் பிளான் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கவுண்டம்பாளையம் பகுதியில்  கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத்தில் தவறு நடந்திருத்தால் அது குறித்து விசாரித்து  நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர்  முத்துச்சாமி தெரிவித்ததார்.
Published by:Arun
First published: