ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

UPS பராமரிப்பில் அலட்சியம்.. கோவையில் பறிபோன மூன்று உயிர்கள்

UPS பராமரிப்பில் அலட்சியம்.. கோவையில் பறிபோன மூன்று உயிர்கள்

கோவை சம்பவம்

கோவை சம்பவம்

Coimbatore | UPS  பேட்டரியில்  இருந்து ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பிடித்து அதில் ஏற்பட்ட கரும்புகை காரணமாக மூச்சு விடமுடியாமல் மூவரும் உயிரிழந்தது தெரியவந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கோவை துடியலூர் அருகே 3 பேர் உயிரிழக்க , வீட்டில் இருந்த  UPS முறையாக பராமரிக்கப்படாமல் வைத்திருந்திருப்பது காரணமாக இருக்கும் என துறை  வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். 3 மாதங்களுக்கு ஒரு முறை UPS பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை துடியலூர் அருகே உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர்   விஜயலட்சுமி. கணவரை இழந்த இவர்  அர்ச்சனா மற்றும் அஞ்சலி என்ற தனது இரு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இரு மகள்களும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த நிலையில் அவர்களுக்கு மாப்பிள்ளை தேடி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை விஜயலட்சுமி வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. அவர்களது  வீட்டில் இருந்து புகை வெளியேறியபடி இருக்கவே அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

Also Read: UPS-ல் தீப்பிடித்து விபத்து.. கோவையில் தாய், 2 மகள்கள் உயிரிழந்த சோகம்

கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர். சமையல் அறையில் விஜயலட்சுமியும், அர்ச்சனா ஆகிய  இருவரும், படுக்கை அறையில் அஞ்சலியும் உயிரிழந்து இருந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த நாயும் உயிரிழந்து கிடந்தது. வீட்டின் ஹாலில்  இருந்த UPS  பேட்டரியில்  இருந்து ஏற்பட்ட மின்கசிவு காரணமாக  தீ விபத்து ஏற்பட்டு வீட்டில் இருந்த பொருட்களில் தீ பிடித்து அதில் ஏற்பட்ட கரும்புகை காரணமாக மூச்சு விடமுடியாமல் மூவரும் உயிரிழத்து இருப்பது தெரியவந்தது.

தீடீரென கரும்புகை பரவியதால் வீட்டில் இருந்து வெளியேற முடியாமல் மூவரும், நாயும் உயிரிழந்து இருப்பது தீயணைப்பு துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீயணைப்பு துறையினருடன்,  தடய அறிவியல் துறையினரும் தீ விபத்திற்கு வேறு காரணங்கள் இருக்கின்றதா என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே மூச்சுதிணறலால் 3 பேர் உயிரிழக்க காரணமாக வீட்டில் இருக்கும் UPS முறையாக பராமரிக்கப்படாமல் இருந்திருப்பதே காரணமாக இருக்கும் என இத்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

விழிப்புணர்வு இல்லாததே விபத்துக்கு காரணம்..

UPS பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு இல்லாதது இந்த விபத்துக்கு காரணமாக இருக்கும் என தெரிவிக்கும் அவர்கள், 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை அடிக்கடி UPS சோதனை செய்ய வேண்டும் எனவும், பேட்டரி உள்ளிட்டவை சூடாக இருந்ததால் உடனே அதை மாற்ற வேண்டும் எனவும் UPS விற்பனை செய்து வரும் மூர்த்தி தெரிவிக்கின்றார். UPS வெடிப்பதற்கு காரணம் பேட்டரிதான் எனவும், புதியதாக UPS பேட்டரி வாங்கினால் 3 ஆண்டுகளுக்கு பின்பு  அடிக்கடி  கவனிக்க வேண்டும் எனவும், பராமரிப்புதான் இதில் முக்கியம் எனவும் UPS விற்பனையாளர் மூர்த்தி தெரிவித்தார்.

Also Read: கஞ்சா பழக்கம்.. மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. நிர்வாண வீடியோ - ஆவடி இரட்டை கொலையும் அதிரவைக்கும் பின்னணியும்

UPS அருகில் பேப்பர் வைப்பது, துணியை போட்டு மூடுவது, தண்ணீர் பாட்டில்கள் வைப்பது, போன்றவை தவிர்க்கப்பட வேண்டும் எனவும்,அந்த பகுதியை அப்படியே விட்டு விட வேண்டும் எனவும் UPS வீக்காக இருப்பது தெரியவந்தால்  உடனே மாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். தனியார் கல்லூரியில் UPS பராமரிப்பு அலுவலராக இருக்கும் கிறிஸ்டோபர் ,  UPS ,இன்வெர்டர் போன்றவற்றை படுக்கை அறையில் வைப்பதை தவிர்க்க வேண்டும், காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றார்.

3 ஆண்டுகளுக்கு பிறகு  டிஸ்டில் வாட்டர் சரியாக இருக்கின்றதா என்பதை  அடிக்கடி பார்த்துகொள்ள வேண்டும், UPS பக்கத்தில்  மெட்டல், இரும்பு போன்றவை வைக்க கூடாது, டிஸ்டில் வாட்டர் அதிகமாக குடித்தாலும் உடனே அதை செக் பண்ண வேண்டும் எனவும்,ஏ.சி படுக்கைஅறையில் UPS  வைக்க கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

Published by:Ramprasath H
First published:

Tags: Accident, Coimbatore, Death, Woman