• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயற்சித்த 4.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயற்சித்த 4.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

காவல் நிலையம்

காவல் நிலையம்

பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயற்சித்த 4.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயற்சித்த 4.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்த போலீசார் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசிடம் ஒப்படைத்துள்ளனர்.

    பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஆனைமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து நேற்று நள்ளிரவு ஆனைமலை  பெரிய பள்ளிவாசல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த டெம்போவில் சோதனை செய்தனர்.  அதில் சுமார் 4.5 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து, ரேஷன் அரிசி  கடத்தலில் ஈடுபட்டதாக ஆனைமலை காந்தி நகரைச் சேர்ந்த ரபீக் (39), பொள்ளாச்சி கண்ணப்பன் நகரைச் சேர்ந்த முகமது ரபீக் (29), ஆனைமலையைச் சேர்ந்த பகீப்புள்ளா (44) ஆகியோரை பிடித்து ஆனைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் கடத்த முயற்சித்த சுமார் 4.5 டன் ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய டெம்போ மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், வழக்கை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசிடம் ஒப்படைத்தனர்.

    செய்தியாளர் -  சக்திவேல்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: