Home /News /tamil-nadu /

கோவையில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்- நாம் தமிழர் கட்சியினர் கைது

கோவையில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்- நாம் தமிழர் கட்சியினர் கைது

நாம் தமிழர் போராட்டம்

நாம் தமிழர் போராட்டம்

RSS | Nam Tamilar | கோயம்புத்தூரில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் ஆர்எஸ்எஸ் பயிற்சி நடைபெறும் பள்ளி முன்பாக காவல் துறையினருக்கும் இந்துத்துவ அமைப்பினருக்கும் இடையே தள்ளு தள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பள்ளியை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை விளாங்குறிச்சியில் உள்ள தர்மசாஸ்தா மெட்ரிக் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்  பயிற்சி முகாம் 8 வது நாளாக நடைபெற்று வருகின்றது."பிராத்மிக் சிக்‌ஷா வர்க்" என்ற பெயரில் நடத்தப்படும் இந்த முகாமில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். முகாம் நடைபெறும் பள்ளி வளாகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்பினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பயிற்சி முகாமிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் இந்தப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

நாம் தமிழர் மேடையில் திமுகவினர் அத்துமீறல்- சீமான் கண்டனம்


 இந்நிலையில் இன்று மாலை நாம் தமிழர் கட்சியின் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளியின் முன்பாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட கோவை மாநகர காவல் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜெயச்சந்திரன் பயிற்சி நடைபெறும் பள்ளிக்கு வந்தார். பள்ளி வாசலில் பாதுகாப்பு பணியில் இருந்த இந்துத்துவ அமைப்பினரை பள்ளி வளாகத்திற்குள் செல்லுமாறு அறிவுறுத்தினார்.


மேலும் பள்ளி வளாகத்திற்குள் செல்ல முயன்ற சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஜெயச்சந்திரனை இந்துத்துவ அமைப்பினர்  தடுத்து நிறுத்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் இந்துத்துவ  அமைப்பினருக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் துணை ஆணையர் நிலைகுலைந்து தடுமாறினார். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு சூழல் நிலவியது.

இதனையடுத்து துணை ஆணையர் ஜெயசந்திரன் அந்த இடத்தில் இருந்து நகர்ந்தார். மேலும்  பள்ளியின் முன்பாக உள்ள பேக்கரி உட்பட கடைகள் அடைக்கப்பட்டது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணி பொறுப்பாளர் கார்த்திகா தலைமையில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நடைபெறும் தர்மசாஸ்தா பள்ளியை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 19 பேரை காவல் துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். காவல் துறையினர் இந்துத்துவ அமைப்பினர் இடையே தள்ளு முள்ளு, நாம் தமிழர் முற்றுகை போராட்டம் காரணமாக  விளாங்குறிச்சி சாலையில் பரபரப்பான சூழல் நிலவியது.
Published by:Karthick S
First published:

Tags: Coimbatore, Naam Tamilar katchi

அடுத்த செய்தி