Home /News /tamil-nadu /

மூலப்பொருட்களின் விலை உயர்வு : கோவையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் கூடங்கள் இன்று வேலை நிறுத்தம்

மூலப்பொருட்களின் விலை உயர்வு : கோவையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் கூடங்கள் இன்று வேலை நிறுத்தம்

வேலை நிறுத்தம்

வேலை நிறுத்தம்

ஒருநாள் கதவடைப்பின் மூலம் 1500 கோடி உற்பத்தி இழப்பு ஏற்படும் எனவும் தெரிவக்கும் கோவை தொழில் அமைப்பினர், இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தவில்லை எனில் தொடர் போராட்டங்களில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கோவையில் அனைத்து தொழில் அமைப்புகளை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் கூடங்கள் இன்று கதவடைப்பு செய்துள்ளனர்.

மூலப் பொருள்களின் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தி இந்தியா முழுவதும் அனைத்து சிறு, குறு தொழில்கள் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய கதவடைப்பு போராட்டம் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் மூலப்பொருட்களின் விலை கட்டுப்பாடின்றி உயர்ந்து வருவதால் காரணமாக அதைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி இந்த ஒரு நாள் முழு கதவடைப்பு போராட்டமானது நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் அனைத்து தொழில் அமைப்புகளை சேர்ந்த சிறு, குறு தொழில் கூடங்கள் இன்று ஒருநாள் கதவடைப்பு போராட்டத்தினை துவங்கியுள்ளனர்.

இந்த கதவடைப்பு போராட்டத்தில் கொடிசியா, காட்மா, டாக்ட், கோப்மா,சீமா உட்பட 45 க்கும் மேற்பட்ட தொழில் அமைப்பினை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். மூலப் பொருட்களின் விலை 30 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை உயர்ந்து இருப்பதாகவும் இந்த் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தும் விதமாக இந்த கதவடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாக தொழில் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

Read More : தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை - ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

மேலும், மூலப்பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதிக அளவில் மூலப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நிலையில் விலை உயர்வு ஏற்படுவதாகவும் தொழில் முனைவோர் தெரிவிக்கின்றனர்.

Must Read : முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை

கோவை மாவட்டத்தில் மட்டும் இன்று ஒருநாள் கதவடைப்பின் மூலம் 1500 கோடி உற்பத்தி இழப்பு ஏற்படும் எனவும் தெரிவக்கும் தொழில் அமைப்பினர், இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வில்லை எனில் தொடர் போராட்டங்களில் ஈடுபட இருப்பதாகவும் தொழில் முனைவோர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published:

Tags: Coimbatore, Factory, Strike

அடுத்த செய்தி