Home /News /tamil-nadu /

கோவை வாலாங்குளத்தில் விரைவில் படகு போக்குவரத்து - அமைச்சர் மதிவேந்தன் தகவல்

கோவை வாலாங்குளத்தில் விரைவில் படகு போக்குவரத்து - அமைச்சர் மதிவேந்தன் தகவல்

மதிவேந்தன்

மதிவேந்தன்

Coimbatore District | சுற்றுலா துறையை பொறுத்தவரை பயணிகளுக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

கோவை வாலாங்குளத்தில்  விரைவில் மாநகராட்சியுடன் இணைந்து படகு போக்குவரத்து துவங்கப்பட இருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் தமிழக சுற்றுலாத் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று திறந்து வைத்தார். சுற்றுலா துறையினரை கவரும் விதமாக கரகாட்டம், ஒயிலாட்டம் உட்பட தமிழக நாட்டுபுற கலைகளின் ஓவியங்கள், கோவை மாவட்டத்தில் உள்ள  குறித்த சுற்றுலா தலங்கள் குறித்த தகவல்கள்  பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதை திறந்து வைத்த பின்னர் கோவை விமான நிலையத்தில் அமைச்சர் மதிவேந்தன் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார். அப்போது கோவை விமான நிலையத்தில்  பார‌ம்ப‌ரிய‌ ந‌ட‌ன‌ நிக‌ழ்ச்சிகளின் புகைப்ப‌ட‌ங்கள் திறக்கப்பட்டுள்ளது எனவும்,  விமான நிலையத்தின் வெளிப்பகுதிகளில் அழியாறு, மேக‌ம‌லை, வால்பாறை, ம‌ருத‌ம‌லை போன்ற‌ புகைப்ப‌ட‌ங்க‌ளும்,த‌னுஷ்கோடி கடற்கரை மற்றும் இள‌நீரை பிர‌ப‌ல‌ப்ப‌டுத்தும் நோக்கில் புகைப்ப‌ட‌ங்க‌ள் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ALSO READ |  மாசம் 30 ஆயிரம் கரெக்டா மாமூல் வரணும் - விடுதி மேனேஜரிடம் பணம் பறிக்க முயன்ற போலி எஸ்.ஐ
 உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இவை அமைக்கப்பட்டுள்ளது எனவும்,கோவை விமான நிலையத்தில்தான் புகைப்ப‌ட‌  கண்காட்சி  முதல்முறையாக  திற‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌து எனவும், அடுத்த‌ப‌டியாக‌ சென்னை விமான நிலையத்தில் இதே போன்று சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் கண்காட்சி  திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

மக்கள் இரு ஆண்டுகளாக கோவிட் காரணமாக முடங்கி கிடந்த நிலையில் தற்போது நிறைய இடங்களுக்கு ஆர்வமாக சுற்றுலா செல்கின்றனர் என தெரிவித்த அவர், சுற்றுலா துறையை பொறுத்த வரை பயணிகளுக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். கோவை வாலாங்குளம் குளத்தில் விரைவில் படகுபோக்குவரத்து துவங்கும் என தெரிவித்த அவர்,கோவையில் உள்ள மற்ற குளங்களில் படகு சவாரி அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் சுற்றுலாதுறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

 
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Coimbatore

அடுத்த செய்தி