முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Bahubali Elephant: வியூகங்களை தவிடுபொடியாக்கும் ‘பாகுபலி’ காட்டு யானை - 2வது நாளாக போராடும் வனத்துறையினர்!

Bahubali Elephant: வியூகங்களை தவிடுபொடியாக்கும் ‘பாகுபலி’ காட்டு யானை - 2வது நாளாக போராடும் வனத்துறையினர்!

Bahubali Elephant

Bahubali Elephant

இரண்டு நாட்களாக வனத்துறையினர் பாகுபலி யானையை பிடிக்க பல்வேறு வியூகங்கள் வகுத்தாலும் , வனத்துறையின் வியூகங்களை பாகுபலி காட்டுயானை தகர்தெறிந்து வருகின்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

 பாகுபலி காட்டு யானையை பிடிக்க  வனத்துறையினர் இரண்டு நாட்களாக பல்வேறு வியூகங்களை வகுத்தாலும் அதில் சிக்காமல் வனத்துறைக்கு போக்கு காட்டி வருகின்றது பாகுபலி  யானை. தற்போது மலைப்பகுதியில் ஏறிய யானையை கீழே இறக்க வன ஊழியர்கள் முயன்று வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக விளைநிலங்களை சேதப்படுத்தியபடி சுமார் 40 வயது மதிக்கதக்க காட்டு யானை சுற்றி தி்ரிகின்றது. இந்த காட்டு யானையை பாகுபலி என பெயரிட்டு பொது மக்கள் அழைக்கின்றனர். இந்த பாகுபலி காட்டு யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகள் நேற்று (ஜூன் 27) காலை 6 மணிக்கு துவங்கியது. வேடர்காலனி அருகே உள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் 5 மருத்து குழுவினருடன் முகாமிட்டுள்ளனர். இந்த ஆபரேசனுக்கு MP20T1 என வனத்துறையினர் பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில்  பாகுபலி காட்டு யானையை பிடிக்கும் முயற்சி இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. இன்று காலை முதல் 5 மருத்துவ குழுவினரும் கோத்தகிரி சாலை, கல்லார் சாலை மற்றும் வனப்பகுதிற்குள் என தனித்தனியாக பிரிந்து யானையை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் ஒசூர் வன மருத்துவர் பிரகாஷ் யானையை நோக்கி மயக்க ஊசியை துப்பாக்கியின் மூலம் செலுத்தினார். ஆனால் குறி தவறியது. இதனையடுத்து  காட்டு யானை 'பாகுபலி' அருகில் இருந்த மலையில் ஏறியது.

Also Read:   "தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழ்நாடே தயாராக உள்ளது; ஆனால் தடுப்பூசி தான் இல்லை" - மா.சுப்பிரமணியன்

இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த வனத்துறை மருத்துவர் சுகுமார் , வனப்பகுதியில் இருந்த பாகுபலி காட்டு யானை ,மலை மீது ஏறி வருகின்றது எனவும், மலையின் மீது ஏறி செல்லும் காட்டு யானையை மீண்டும் கீழே இறக்குவதற்கு வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.  மலையில் இருந்து யானை கீழே இறங்கிய பின்னரே அதற்கு மயக்க ஊசி செலுத்த தேவையான முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும், காலையில் ஒரு முறை மயக்க ஊசி செலுத்திய போது அது தவறியது எனவும் தெரிவித்தார்.

இந்த பாகுபலி யானையால் மனிதர்களுக்கு எந்த வித பிரச்சினையும் இது வரை ஏற்பட வில்லை என கூறிய அவர், யானை சமதள பரப்பிற்கு வரும் வரை காத்திருந்து அதற்கு ரேடியோ காலர் பொருத்தப்படும் எனவும் தெரிவித்தார். யானைக்கு ரேடியோ காலர் பொருத்தினால் அதன் நடவடிக்கைகளை அறிந்து சேதம் ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும  மருத்துவர் சுகுமார் தெரிவித்தார்.

Also Read:   தமிழகத்தில் 400க்கும் மேலான திரையரங்குகளுக்கு உரிமம் இல்லை - திருச்சி ஸ்ரீதர்

ரேடியோ காலர் பொருத்தும் இந்த முயற்சி வெற்றி பெற்றால், வரும் காலங்களில்  காட்டு யானைகளை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்லும் தேவை இருக்காது எனவும்  வனத்துறை மருத்துவர் அசோகன் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டு நாட்களாக வனத்துறையினர் பாகுபலி யானையை பிடிக்க பல்வேறு வியூகங்கள் வகுத்தாலும் , வனத்துறையின் வியூகங்களை பாகுபலி காட்டுயானை தகர்தெறிந்து வருகின்றது. வனத்துறையும் புதிய வியூகங்கள் அமைத்து பாகுபலியை பின் தொடர்ந்து வருகின்றனர். 40 வயதான பாகுபலி யானை  கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அடிக்கடி விளைநிலங்களில் புகுந்து சேதப்படுத்தியதால் இந்த யானைக்கு ரேடியோ காலர் பொருத்த வனத்துறை முடிவு செய்துள்ளனர்.

First published:

Tags: Coimbatore, Elephant, Mettupalayam, Wild Animal