உக்கடம் பெரியகுளத்தின் கரைகளில் கொட்டப்படும் மருத்துவகழிவுகள்... செத்து மிதக்கும் மீன்கள் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

மருத்துவக்கழிவுகள்

வாலாங்குளத்தில் கழிவுகள் கலப்பதால் நீரில் போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல்  நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன.

  • Share this:
கோவை உக்கடம் பெரிய குளம் மற்றும் வாலங்குளத்தில் கழிவுகள் கலப்பதால்  ஏராளமான  மீன்கள் செத்து மிதக்கின்றன. குளத்தில் கழிவுகள் கலப்பதை தடுக்க  மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உக்கடம் பெரியகுளம் மற்றும்  வாலாங்குளம் போன்றவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகு படுத்தப்பட்டுள்ளது. குளக்கரைகள் அழகு படுத்தபட்டாலும், குளத்தில்  கழிவுகள் கலக்கப்படுவது தொடர்கின்றது. குளத்திற்கு தண்ணீர் வரும்  வாய்க்கால் முறையாக  பராமரிப்பு பணிகள் இல்லாத காரணத்தாலும், கழிவுகள் கலப்பதாலும் இந்த இரு குளங்களிலும்  ஆகாயத்தாமரைகள் அதிகளவில் படர்ந்து காணப்படுகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் இந்த குளங்களில் மருத்துவ கழிவுகளும் கொட்டப்படுவதால் சுகாதாரமற்ற சூழல் நிலவுகின்றது.வாலாங்குளத்தில் கழிவுகள் கலப்பதால் நீரில் போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல்  நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன.இதே போல் உக்கடம் பெரியகுளத்தின் கரைகளில் மருத்துவகழிவுகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது.

Also Read: சப் இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்டு எஸ்கேப்பாக முயன்ற பிரபல ரவுடி.. சென்னையில் சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்

எனவே உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம் போன்றவற்றை அழகுபடுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தாமல்,  கழிவுநீர் கலப்பதை , கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவும் இறந்த மீன்களை அப்புறபடுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: