Home /News /tamil-nadu /

மசினக்குடியை அச்சுறுத்திய T23 புலி.. மைசூரில் எப்படி இருக்கிறது?

மசினக்குடியை அச்சுறுத்திய T23 புலி.. மைசூரில் எப்படி இருக்கிறது?

மசினக்குடியில் பிடிப்பட்ட புலி

மசினக்குடியில் பிடிப்பட்ட புலி

வனத்துறையின் உத்தரவுகளை கேட்க துவங்கி இருந்தாலும் இன்னுமும் வனவிலங்கிற்குரிய மூர்க்தனத்துடன் புலி இருப்பதாக கூறப்படுகிறது.

மைசூரில் உள்ள வனவிலங்கு மீட்பு மையத்தில் T 23 புலியானது ஆரோக்கியமாக இருப்பதாகவும், அதன் எடை அதிகரித்து இருப்பதாகவும்  தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  மனிதர்களை வேட்டையாடிய T23 புலியை நீண்ட தேடுதல் பணிக்கு பின்பு அக்டோபர் 15 ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் அந்த புலியானது கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள வனஉயிரின மீட்பு மற்றும் மறுவாழ்வு மைத்தில் வைத்து சிகிச்சையானது அளிக்கப்பட்டது. காட்டில் வேறு விலங்குகளுடன் சண்டையிட்டதில் பல்வேறு இடங்களில் காயங்களுடன் இருந்த T23 புலிக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

Also Read: கோவை குற்றாலத்துக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..

இந்நிலையில் தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் இன்று மைசூருவிற்கு சென்று புலியின் உடல் நிலையை நேரில் பார்ஙையிட்டு அங்கு நடைபெற்று வரும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார். T23 புலியின் உடலில் இருந்த பெரிய காயங்கள் அனைத்தும் குணமடைந்து ஆரோக்கியமாக இருப்பதாகவும் , புலியின் எடை 200 கிலோவை தொட்டு இருப்பதாகவும் தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் தெரிவித்துள்ளார்.

Also Read: மலக்குடலில் மறைத்து தங்கம் கடத்தல்.. கோவை விமானநிலையத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்

வாரத்தில் ஆறுநாட்கள் 10 கிலோ வரை மாட்டிறைச்சி சாப்பிடுவதாகவும் தெரிவித்துள்ள அவர், புலியின் எச்சங்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் எந்தவித நோய் தொற்றும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்துள்ளதாகவும் சேகர்குமார் நீரஜ் தெரிவித்தார்.  வனத்துறையின் உத்தரவுகளை கேட்க துவங்கி இருந்தாலும் இன்னுமும் வனவிலங்கிற்குரிய மூர்க்தனத்துடன் இருப்பதாகவும் தெரிவித்த அவர், நல்ல முறையில் தூங்குவதாகவும் தெரிவித்தார். இன்னமும் 5 மாதங்கள் வரை T23 புலியை முழுமையாக கண்காணித்து சிகிச்சை அளிக்க வேண்டி இருப்பதாகவும் தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்துள்ளார்.
Published by:Ramprasath H
First published:

Tags: Coimbatore, Masinagudi, Mysuru, Tamil News, Tiger

அடுத்த செய்தி