பெண்களின் சபரிமலை என்றழைக்கபடும் குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயிலில் மாசிகொடை திருவிழாவின் இறுதி நாளான நேற்று நள்ளிரவு முக்கிய நிகழ்வான ஒடுக்கு பூஜை நடைபெற்றது கேரளா தமிழகத்திலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றானது மண்டைகாடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கபடும் இத்திருக்கோவில் ஆண்டுதோறும் மாசி கொடைதிருவிழா 10நாட்கள் நடைபெறுவது வழக்கம் தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் மிக பிரசித்தி பெற்ற இவ்வாலயத்தில் பெண்கள் விரதமிருந்து இருமுடி கட்டி சென்று வழிபடுவார்கள் இதேபோல் ஆண்டு தோறும் நடைபெறும் மாசி திருவிழாவின்போது பத்து நாட்களும் பெண்களின் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்வான பத்தாவது நாள் நடைபெறும் ஒடுக்கு பூஜை வேறு எந்த கோயில்களிலும் இல்லாத வகையில் மாறுபட்ட நிகழ்ச்சியாக நடைபெறும் இந்த ஆண்டு மாசிகொடை திருவிழாவின் இறுதி நாளான நேற்று நள்ளிரவு மறைவான இடத்தில் தயாரிக்கப்பட்ட பதினொன்று வகையான உணவு பதார்த்தங்கள் கோயில் அர்ச்சகர்களால் பவனியாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு படைக்கபட்டு ஒடுக்கு பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் ,இதையடுத்து 800க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர் விழாவையொட்டி நேற்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
செய்தியாளர்: சஜயகுமார் (கன்னியாகுமரி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.