Home /News /tamil-nadu /

மதுபோதையில் ஒரின சேர்க்கைக்கு உடன்பட மறுத்த நபரை கல்லால் அடித்துக் கொன்ற இளைஞர்

மதுபோதையில் ஒரின சேர்க்கைக்கு உடன்பட மறுத்த நபரை கல்லால் அடித்துக் கொன்ற இளைஞர்

மதுபோதையில் ஒரின சேர்க்கைக்கு உடன்பட மறுத்த நபரை கல்லால் அடித்துக் கொன்ற இளைஞர்

மதுபோதையில் ஒரின சேர்க்கைக்கு உடன்பட மறுத்த நபரை கல்லால் அடித்துக் கொன்ற இளைஞர்

Coimbatore Crime News | படுகாயமடைந்த பழனிச்சாமிக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் , பழனிச்சாமி  சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

கோவை ரத்தினபுரி பகுதியில் மதுபோதையில் ஒரின சேர்க்கைக்கு உடன்பட மறுத்த 58 வயதான பழனிச்சாமி என்பவரை  கல்லால் அடித்துக்கொலை செய்த 21 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் அதே பகுதியை சேர்ந்த  ஸ்ரீ விஷ்ணு  என்ற 21 இளைஞருடன் அப்பகுதியல் உள்ள தனியார் மருத்துவமனை அருகில் மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறவே ஸ்ரீ விஷ்ணு, 58 வயதான பழனிச்சாமியை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. தகாத உறவுக்கு அவர் உடன்பட மறுத்த நிலையில் ஆத்தி்மடைந்த ஸ்ரீ விஷ்ணு அங்கிருந்த கல்லால் அவரை தாக்கினார்.

Also Read : தண்ணீர் கேட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவர் போக்சோவில் கைது

இதில் பழனிச்சாமி படுகாயம் அடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தார். இந்த தகவல் அறிந்த அப்பகுதியினர் பழனிச்சாமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த பழனிச்சாமிக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் , பழனிச்சாமி  சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதனையடுத்து ஸ்ரீ விஷ்ணுவை கைது செய்து ரத்தினபுரி போலீசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 
Published by:Vijay R
First published:

அடுத்த செய்தி