பொள்ளாச்சி அருகே 15 வயது சிறுமியை இரண்டாவது திருமணம் செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக இளைஞர் ஒருவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர்(34), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் சந்திரசேகருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோரிடம் பேசி சிறுமியை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக குழந்தைகள் நலவாரிய அலுவலர் ராணி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து சந்திரசேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் சந்திரசேகரை கைது செய்து கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குழந்தை திருமணத்துக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் உள்ளிட்ட உறவினர்கள் 7 பேர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, தலைமறைவாக உள்ள சிறுமியின் தாயை போலீசார் தேடி வரும் நிலையில், அப்பகுதி மக்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் - ம.சக்திவேல்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, POCSO case, Pollachi