பெட்ரோல், டீசல் விலை உயர்வு: பிச்சை எடுத்து மக்கள் நீதி மய்யம் போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: பிச்சை எடுத்து மக்கள் நீதி மய்யம் போராட்டம்
மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில துணை தலைவர் தங்கவேலு இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், சொத்து வரி உயர்வை குறைக்க கோரியும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில துணை தலைவர் தங்கவேலு இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல் , டீசல், எரிவாய் சிலிண்டர் விலையை குறைக்க கோரியும், சொத்துவரி உயர்வை திரும்ப பெறக்கோரியும் முழக்கங்கள் எழுப்பபட்டது.
ஆர்ப்பாட்டத்தின் போது தட்டுக்களை வைத்து பெட்ரோல், டீசல் வாங்க பணமில்லை பிச்சையிடுங்கள் எனக்கூறி யாசகம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஆட்டோ ஒன்றின் முன்பு சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.