கோவையில் சிவராத்திரியை முன்னிட்டு சொக்கம்புதூர் மயானத்தில் நள்ளிரவில் நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்ச்சியில் மனித எலும்பை வாயில் கடித்தபடி மேளதாளங்களுக்கு ஆக்ரோசமாக நடனமாடி மாசாணியம்மன் உருவத்தை சிதைத்து மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவையில் சிவராத்திரியை முன்னிட்டு சொக்கம்புதூர் மயானத்தில் நள்ளிரவில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. சொக்கம்புதூர் மயானத்தில் களிமண்ணால் அமைக்கபட்ட மாசாணியம்மன் உருவத்தை வைத்து மேளதாளம் முழங்க நள்ளிரவு பூசைகள் நடத்தப்பட்டது. சொக்கம்புதூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் இருந்து நள்ளிரவில் மேளதாளங்களுடன் பக்தர்களுடன் வந்த பூசாரி பூசை நடத்தினார்.கையில் அரிவாள், சூலாயுதம் போன்ற ஆயுதங்களுடன் மயான பூசையில் ஈடுபட்ட பூசாரி, மாசாணியம்மனின் களிமண் உருவத்தை சுற்றி ஆக்ரோசமாக நடனமாடியபடி பூசை செய்தார்.
Also Read: 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொலை - இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு
இதைதொடர்ந்து மாசாணியம்மனின் இருதய பகுதியில் இருந்து கைபிடி மண்ணை எடுத்து , அதில் இருந்து மனித எலும்புகளை வாயில் கடித்தபடி மயான கொள்ளையில் பூசாரி ஈடுபட, பக்தர்கள் ஆரவாரத்துடன் மாயன கொள்ளை நிகழ்ச்சி நள்ளிரவில் கண்டு பரவசமடைந்து வழிபட்டனர்.பின்பு மாசாணியம்மனின் உருவத்தின் இருதய பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை சொக்கம் புதூரில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலுக்கு கொண்டி சென்று அங்கு அந்த மண்ணை வைத்து பூசை செய்தனர்.
Also Read: கரூரில் திருநங்கைகள் நடத்திய மயானக் கொள்ளை விழா.. புகைப்படங்கள்
நள்ளிரவில் நடைபெறும் இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது சொக்கம்புதூர் பகுதி மக்களின் நம்பிக்கை .இதேப்போன்று கோவையில் உள்ள பல்வேறு கோவில்களில் சிவராத்திரியை முன்னிட்டு நள்ளிரவு பூசைகளானது நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Maha Shivaratri