Home /News /tamil-nadu /

இலவச பூஸ்டர் தடுப்பூசிக்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இலவச பூஸ்டர் தடுப்பூசிக்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மா. சுப்பிரமணியன்

மா. சுப்பிரமணியன்

Ma. Subramanian | முன்கள பணியாளர்கள் நீங்களாக பிறருக்கும் தடுப்பூசி பூஸ்டர்களை இலவசமாக செலுத்த மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

  தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் காலியாக உள்ள 24 இடங்களை நிரப்ப மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக கோவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  கோவை அரசு மருத்துவமனையில் 'ஹீமோபீலியா' தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் கோவை வால்பாறையில் அரசு மருத்துவமனையில் ரூ 9 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி, திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் ரூ. 9 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் 6.89 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம் கட்டும் பணி ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.

  பின்னர் தமிழகம் முழுவதும் 32 அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ. 87.97 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளையும் துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, ஹீமோபிலியா என்பதை நோய் என்று கருதக்கூடாது. இதனை நோய் என்று கருதினால் மனதில் பாதிப்பு ஏற்படும். ஹீமோபீலியாவில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பாதிக்கப்படும் போது லட்சக்கணக்கில் செலவாகும் நிலை இருந்தது.இதனால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையை கலைஞர் கருணாநிதி துவக்கி வைத்தார்.  இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு பெற்றுள்ளது. சென்னை முதல் இடத்திலும் அதற்கு அடுத்தபடியாக கோவை இந்த மருத்துவ வசதிகளை பெற்றுள்ளது.

  ALSO READ |  ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் அட்டூழியம்.. போலீசிடம் தகவல் கூறிய முதியவர் கொலை - நெல்லையில் பரபரப்பு
   மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை கிருஷ்ணகிரியில் தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். இந்த திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. இத்திட்டத்தின் மூலம் 61,18,943 பேர் பயனடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை விரைவில் ஒரு கோடியை எட்டும். இந்த இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதம் பெருமளவில் குறையும். இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 640 தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் உள்ளது. இந்தத் திட்டத்தில் விபத்தினால் படுகாயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் நிதி அளிக்கப்படும். பின்னர் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் நிதி உதவி செய்யப்படும்.


  இந்தத் திட்டத்தால் கடந்த மூன்று மாதத்தில் விபத்தில் சிக்கி பயனடைந்தோரின் எண்ணிக்கை 46, 949 பேர் ஆயிரம் பேர். 41 கோடி ரூபாயை இந்தத் திட்டத்திற்கு அரசு செலவழித்துள்ளது. இந்த இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பயன் அடைந்து வருகின்றனர். 30, 40 சதவீத உயிரிழப்புகள் குறைந்து உள்ளது. விபத்தினால் பாதிக்கப் படுபவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்பவர்களுக்கு ரூ 5,000 ரூபாய் அளிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.


  என்னுடைய முதல் இலக்கு தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதுதான் என அவர் பேசினார்.

  இந்த நிகழ்ச்சியில் இதற்கு முன்னர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் நிர்மலா வரவேற்புரையாற்றினார். மேலும் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றி செல்வன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர்.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  ALSO READ |  மண்ணை சாப்பிட்டு எலும்பும் தோலுமாக மாறிய மூதாட்டி.. சொத்துக்காக பூட்டிவைத்து மகன்கள் செய்த கொடூரம்
   பின்னர் இந்த நிகழ்ச்சியின் முடிவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில், தமிழகத்தில் 100 சதவீதம் மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டது எனவும் மத்திய அரசுதான் 812 இடங்களை நிரப்ப வேண்டும் எனவும் ஆனால் விண்ணப்பிப்பதற்கான காலம் முடிவடைந்துவிட்ட நிலையில் 24 இடங்களை மத்திய அரசு நிரப்பவில்லை எனவும் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி இடங்களை நிரப்ப வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாகவும் தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணனும் அழுத்தம் கொடுத்துள்ளார் என்றார். மேலும் நாடு முழுவதும் 300 இடங்கள் நிரப்ப நடவடிக்கை என சொல்லியுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளதாகவும் இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் கவலை கொள்ள வேண்டாம் என்றார்.

   

  இதேபோல தமிழகத்தில் கொரோனா முழுமையாக முடிவுக்கு வந்ததாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் இந்தியாவில் தற்போது 7 வகை வைரஸ்கள் நிலுவையில் உள்ளது எனவும் அரசு எடுத்த நடவடிக்கையால் கடந்த 21 நாட்களாக உயிரிழப்பு இல்லை என தெரிவித்தார். தமிழகத்தில் 92.38 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும், 77.28 சதவீதம் 2வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் 88 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது எனக்கூறிய அவர் தமிழ்நாட்டை பொருத்தவரை மரபணு மாற்றம் செய்யும் ஆய்வுக்கூடத்தை நாட்டிலேயே தமிழக அரசு தான் சொந்தமாக வைத்துள்ளது எனவும் தெரிவித்தார்.

  ALSO READ |  கருத்து சுதந்திரம் சிலருக்கு மட்டும்தானா? இளையராஜா விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி
   பிற நாடுகள் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் முகக்கவசம் போட விலக்கு அளிக்கப்படவில்லை என்பதை கருத்தில் கொண்டு மக்கள் தடுப்பு நடவடிக்கைகளை தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தினார். முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் பெட்டகம் வழங்குவதில் கடந்த ஆட்சியில் குளறுபடி ஏற்பட்டது எனவும் குழு அமைத்து அதை ஆய்வு செய்து வருவதாகவும் விடுபட்டவர்களுக்கு மாவட்டம் வாரியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


  தமிழகத்தில் 355 ஒன்றியங்களில் இல்லம் தேடி மருத்துவம்  செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கோவையில் 159 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளில் போட வேண்டும் என மத்திய அரசு தான் அறிவித்துள்ளதாகவும், முன்கள பணியாளர்கள் நீங்களாக பிறருக்கும் தடுப்பூசி பூஸ்டர்களை இலவசமாக செலுத்த மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

   

  செய்தியாளர் : ஆரோக்கியஜெரால்ட்
  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Corona, Covid-19, Ma subramanian

  அடுத்த செய்தி