குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி: 3வது அலையால் கோவைக்கு பாதிப்பு!

கோவை பாதிப்பு

எதிர்ப்பு சக்தி 43 சதவீதமாக இருப்பதால் கோவையில் 3 வது அலையால் அதிகளவு பாதிப்பு இருக்க  வாய்ப்புண்டு என மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சித்திக் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கோவையில் மக்களுக்கு  கொரோனா  எதிர்ப்பு சக்தி 43 சதவீதமாக இருப்பதால்,  3 வது அலையில் அதிகளவு பாதிப்பு இருக்க  வாய்பபுண்டு  என  கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சித்திக் தெரிவித்தார்.

    கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து  மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், வணிக வரித்துறை ஆணையருமான  சித்திக் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதை தொடர்ந்து கோவை மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில்  பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை நடத்தினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சித்திக்,கோவை மாவட்டத்தில் சராசரியாக 200 புதிய நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.கோவை மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி 43 சதவீதமாக இருக்கின்றது எனவும்,சென்னையில் கோவிட் எதிர்ப்பு சக்தி  78 சதவீதமாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார். எதிர்ப்பு சக்தி 43 சதவீதமாக இருப்பதால் கோவையில் 3 வது அலையால் அதிகளவு பாதிப்பு இருக்க  வாய்ப்புண்டு எனவும், இதை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் எனவும் தெரிவித்த அவர், ஒரு மாதத்திற்குள் கூட 3 வது அலை வர வாய்ப்புண்டு எனவும் தெரிவித்தார்.

    இதையும் படிக்க: தமிழ்நாட்டில் இன்று 1,929 பேருக்கு கொரோனா : கோவையில் தொடர்ந்து 200க்கும் மேல் பதிவாகும் தொற்று!


    முகக் கவசம் அணிய வேண்டும் என்றும்  தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என தெரிவித்த அவர், தற்போது முழு ஊரடங்கு இல்லாமல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது எனவும், இதை தொடர்ந்தால் முழு ஊரடங்கை தள்ளிவைக்கவும்,  தவிர்க்கவும் வாய்ப்புண்டு என தெரிவித்தார். கோவையில் தற்போது எதிர்ப்பு சக்தி  43 சதவீதமாக இருக்கும் நிலையில் இதை அதிகரிக்க தடுப்பூசி மட்டுமே வழி எனவும்அவர் கூறினார்.

    கோவைக்கு தடுப்பூசிகள் அதிகம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். 3வது அலை ஓரே மாதத்தில் கூட வரலாம் என்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்த அவர்,அரசு மருத்துவமனை, இ.எஸ்ஐ மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

    மேலும் படிக்க: அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஓட்டுநர் இல்லாமல் தானாக மின்சார ரயில் நகர்ந்ததால் பரபரப்பு..


    ஒரே சமயத்தில் எல்லா மாவட்டங்களிலும் பாதிப்பு வர வாய்ப்பு குறைவு என குறிப்பிட்ட சித்திக், அரசு மருத்துவமனை, இ.ஸ்.ஐ மருத்துவமனைகளில் தேவையான ஆக்ஸிஜன் படுக்கை, வென்டிலேட்டர்கள் உள்ளன. ஒரு வாரத்தில் படுக்கைகளை உயர்த்தி கொள்ள முடியும் என்றும் கூறினார்.

    கோவையில் முன் தயாரிப்புகள்   இருப்பதால் , நிறைய உயிர் சேதம் இல்லாமல் 3 வது அலையை நம்மால்  எதிர் கொள்ள முடியும் எனவும், அடுத்த 2 மாதங்களுக்கு மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும்  கேட்டுக்கொண்டார்.  மேலும்,  “இந்த முறை குழந்தைகளுக்கு பாதிப்பு வந்தால் அதை எதிர் கொள்ள தயாராக இருக்கின்றோம்.  அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு 124 ஆக்ஸிஜன் படுக்கைகளும், 82 ஐ.சி.யு படுக்கைகளும் தயாராக உள்ளன.  இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கை 40ம்,  ஐ.சி.யு படுக்கைகள் 30ம் குழந்தைகளுக்கு தயாராக உள்ளன’ என்று கூறினார்.
    Published by:Murugesh M
    First published: