ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சிக்னலில் நின்ற கார்.. காதல் ஜோடி அலறல் சத்தம் - கோவையில் நள்ளிரவில் பரபரப்பு

சிக்னலில் நின்ற கார்.. காதல் ஜோடி அலறல் சத்தம் - கோவையில் நள்ளிரவில் பரபரப்பு

கோவை தம்பதி

கோவை தம்பதி

Coimbatore Lovers: காதல் ஜோடி நடுரோட்டில் காவல் துறையினரின் காலில் விழுந்து தங்களை காப்பாற்றும் படி கதறியதால் பரபரப்பு நிலவியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை, பெண்ணின் பெற்றோரே காரில் கடத்திய நிலையில், லட்சுமி மில் சிக்னலில் அவர்களின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள்  காதல் தம்பதியை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவை லட்சுமி மில் சிக்னலில்  நேற்று இரவு நின்று கொண்டிருந்த காரில் இருந்து உதவி கேட்டு கதறல் சப்தம் கேட்டது. வாகனத்தில் இருந்து இறங்க முயன்ற இளைஞரை பிடித்து உள்ளே தள்ளிக்கொண்டு இருந்தனர்.  இதனையடுத்து அங்கிருந்த சக வாகன ஓட்டிகள் உடனடியாக அந்த காரினை மறித்து அதில் இருந்தவர்களை இறக்கினர். காரில் இருந்து இறங்கிய தம்பதி தங்களை காரில் கடத்துவதாகவும், காப்பாற்றும்படியும் கதறினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Also Read:  ஓவர் ஸ்பீடு.. அந்தரத்தில் பறந்த பைக்.. தூக்கிவீசப்பட்ட இளைஞர்கள் - அதிர்ச்சி வீடியோ

அப்போது அவர்கள் மணியகாரம்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வர் மற்றும் சினேகா எனவும்,சமீபத்தில் காதல் திருமணம் நடைபெற்றதாகவும், சரவணம்பட்டி காவல் நிலையத்தில்  பெற்றோரை அழைத்து இருவரும் மேஜர் என்பதால்  பெற்றோரிடம் தொந்தரவு செய்யக்கூடாது என காவல்துறையினர் அறிவுறுத்தி அனுப்பியதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று பெண் வீட்டார் சமரசமாகி விட்டதாக கூறி  கோவிலுக்கு செல்லலாம் என கூறி ஏமாற்றி தங்களை எங்கோ கடத்தி செல்வதாகவும், தங்களை பெற்றோர் கொன்று விடுவார்கள் எனவும் கதறினர்.

' isDesktop="true" id="708719" youtubeid="XwFlhGAypeU" category="coimbatore-district">

காரில் கத்தியை கழுத்தில் வைத்து தங்களை மிரட்டியதாகவும், தங்களை  காப்பாற்றும் படி போக்குவரத்து போலீசாரின் காலில் விழுந்து கதறினர். இதனையடுத்து உடனடியாக ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த காவல்துறையினர் காதல் ஜோடியை அவர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் பெண்ணின் பெற்றோரையும் அவர்கள் வந்த வாகனத்தையும் பந்தய சாலை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: ஆடு திருடும் கும்பலிடம் எஸ்.ஐ லஞ்சம் கேட்ட ஆடியோ வைரல் - பின்னணி என்ன?

காரில் கடத்தி சென்று கொலை செய்து விடுவார்கள் என காதல் திருமணம் செய்த தம்பதி நடுரோட்டில் கதறியதால்   பரபரப்பான சூழல் நிலவியது. இந்நிலையில் ஏற்கனவே இந்த காதல்  விவகாரம் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டது என்பதால் தம்பதியையும், பெண்ணின் பெற்றோரையும் சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு  போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by:Ramprasath H
First published:

Tags: Attempt murder case, Coimbatore, Kidnap, Love issue, Love marriage, Police