Home /News /tamil-nadu /

கோவையில் காரில் கடத்தப்பட்ட காதல் ஜோடி - நடவடிக்கை வேண்டி காவல்நிலையத்தில் புகார்

கோவையில் காரில் கடத்தப்பட்ட காதல் ஜோடி - நடவடிக்கை வேண்டி காவல்நிலையத்தில் புகார்

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

எங்களை காரில் வைத்து கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் - காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடி புகார்.

    கோவையில் காதல் திருமணம் செய்த தம்பதியை காரில் கடத்திய விவகாரத்தில் தங்களுக்கு  உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என  பாதிக்கப்பட்ட  காதல் திருமணம் செய்த தம்பதிகள் புகார் அளித்துள்ளனர்.

    கோவை மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பரும், சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த சினேகா என்பவரும் கடந்த 8 வருடமாக காதலித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.
    பின்னர் இருவரும்  பாதுகாப்பு கேட்டு சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இரு வீட்டாரையும் அழைத்து பேசிய காவல் துறையினர் சமதானம் செய்து  அனுப்பியுள்ளனர்.

    Also Read:  ஆசைப்பட்டு போலீஸ் வேலைக்கு வந்தேன்.. வேதனையோடு போறேன் - ஆடு திருடும் கும்பலின் வைரல் ஆடியோவால் எஸ்.ஐ ராஜினாமா

    இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு தம்பதியை வீட்டிற்கு வரச்சொல்லிய பெண்ணின் பெற்றோர் வீட்டில் வைத்து இருவரையும் தாக்கியுள்ளனர். பின்னர் அவர்களை காரில் ஏற்றி அழைத்து சென்ற போது, லட்சுமி மில் சிக்னலில் கூச்சல் எழுப்பி காதல் தம்பதியினர் கதறிய நிலையில், பொது மக்கள்  இருவரையும் போலீசார் உதவியுடன் மீட்டனர்.

    Also Read: சிக்னலில் நின்ற கார்.. காதல் ஜோடி அலறல் சத்தம் - கோவையில் நள்ளிரவில் பரபரப்பு

    தங்களை கடத்திச் சென்று பெற்றோர் கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாக இருவரும் கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    தம்பதி மற்றும் அவர்களின் பெற்றோர் என இருதரப்பினரையும் இரவு நேரத்தில் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    Also Read: காதலிக்கு திருமணம்.. மனவேதனையில் சிஐஎஸ்எஃப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

    இந்நிலையில் நேற்று காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி, காந்திபுரம் சட்டம் ஒழுங்கு உதவிஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள்..
    தங்களை பெற்றோரும், உறவினர்களும் தாக்கியதுடன் மிரட்டல் விடுத்து காரில் கடத்தி சென்ற நிலையில்  பொதுமக்கள் உதவியுடன் காரில் இருந்து தப்பித்து வெளியே வந்தோம் எனவும் தங்களுக்கு உரிய  பாதுகாப்பு வழங்க  வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
    மேலும் எங்களை கொலை முயற்சி செய்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காதல் திருமணம் செய்த விக்னேஸ்வர்- சினேகா காதல் தம்பதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

    செய்தியாளர்: ஜெரால்டு (கோவை)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Coimbatore, Crime News, Kidnapping Case, Love, Love marriage, Tamilnadu

    அடுத்த செய்தி