Home /News /tamil-nadu /

வலிமை ரிலீஸ் திரையரங்கு வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் - இளைஞர் கைது

வலிமை ரிலீஸ் திரையரங்கு வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் - இளைஞர் கைது

கைது செய்யப்பட்ட லட்சுமணன்

கைது செய்யப்பட்ட லட்சுமணன்

Valimai | அதிக விலைக்கு டிக்கெட் விற்கபட்டதால், டிக்கெட் வாங்க முடியாத ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • News18
  • Last Updated :
    கோவையில் வலிமை திரைப்படம் வெளியான கங்கா திரையரங்கின் முன்பு கடந்த 24 ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக லட்சுமணன் என்ற நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    பிப்ரவரி 24 ம் தேதி நாடு முழுவதும் நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம் திரையிடப்பட்டது. முதல்நாள் அதிகாலையில் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது. கோவையில் 24ம் தேதி படம் வெளியான கங்கா திரையரங்கம் முன்பு அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றார்கள்.

    பெட்ரொல் குண்டு வீசப்பட்டதில் அங்கிருந்த இருசக்கர வாகனம் ஒன்று லேசான சேதம் அடைந்தது.அங்கு நின்று கொண்டு இருந்த ராமசந்திரன் என்பவருக்கும் காலில் லேசான காயம் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து காட்டூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிசிடிவியில் பதிவாகி கட்சிகளைக் கொண்டு விசாரணையானது நடத்தப்பட்டு வந்தது.

    இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக
    கோவை ரத்தினபுரி பகுதியில் தங்கி பணிபுரிந்து வரும் லட்சுமணன் என்ற 20 வயது வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    Also read... சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் தற்கொலை

    நெல்லை பாளையங் கோட்டை பகுதியை சேர்ந்த லட்சுமணன், கோவையில் தங்கி இருந்து பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். கடந்த பிப்ரவரி 24 ம் தேதி வலிமை திரைப்படத்தின் ரசிகர் மன்ற காட்சிக்காக சென்ற போது, படத்தின் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு அங்கிருந்த ரசிகர் மன்றத்தை சேர்ந்த நவீன் என்பவர் விற்று வந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்து பெட்ரோல் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ரசிகர் மன்ற நிர்வாகியிடம் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்க முடியாத ஆத்திரத்தில், டிக்கெட் விற்ற நவீனை அச்சுறுத்த தனது நண்பர்களுடன் சேர்ந்து பெட்ரோல் குண்டை வீசி சென்றதாகவும் கைதான லட்சுமணன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவருடன் இருந்த மற்ற நண்பர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Crime News, Valimai

    அடுத்த செய்தி