ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோவை குற்றாலத்தில் குளிப்பதற்கு அனுமதி… சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கோவை குற்றாலத்தில் குளிப்பதற்கு அனுமதி… சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கோவை குற்றாலத்தில் உற்சாக குளியல் போடும் சுற்றுலா பயணிகள்.

கோவை குற்றாலத்தில் உற்சாக குளியல் போடும் சுற்றுலா பயணிகள்.

காலை முதலே அதிக அளவில் கூட்டம் கூட்டமாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  இரண்டு மாதங்களுக்கு பிறகு அருவியில் நீர் வரத்து குறைந்ததால் கோவை குற்றாலத்தில் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால்  குடும்பத்துடன் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

  கோவை ஆலந்துறை அடுத்த  சாடிவயல் சிறுவாணி அடிவார மலைப்பகுதியில் கோவை குற்றால அருவி உள்ளது. இந்த அருவியில் குளித்து மகிழ தமிழக மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் உள்ளுர் மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.

  கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக கனமழை காரணமாகவும் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாகவும் நீர்வரத்து அதிகமானதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி  குற்றால அருவிக்கு குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.

  இந்நிலையில் குற்றால அருவியில் நீர்வரத்து குறைவாகவும் குளிப்பதற்கு ஏதுவாக இருந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.

  அதிகாரிகள் அலட்சியம்..நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் - தஞ்சை விவசாயிகள் வேதனை

  காலை முதலே அதிக அளவில் கூட்டம் கூட்டமாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். முன்னதாக சுற்றுலா பயணிகள் உடைமைகளை சோதனை செய்த பிறகு சுற்றுலா வேனில் வனத்துறையினர் அனுமதித்தினர். பின்னர் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி நிபந்தனைகளுக்கு உட்பட்டு அட்டவணையின்படி அனுமதி வழங்கப்படுகிறது

  Slot 1 - 10.00 am to 11.00 am

  Slot 2 - 11.30 am to 12.30 pm

  Slot 3 - 1.00 pm to 2.00 pm

  மேற்கண்ட கால அட்டவணையில் Slot 1- ல்  அனுமதிச் சீட்டு பெற்று செல்லும் சுற்றுலா  பயணிகள் மதியம் ஒரு மணிக்குள்  நீர்வீழ்ச்சி பகுதியில் இருந்து வெளியே வரவேண்டும்  என்று கேட்டு கொள்ளப்படுகிறது.

  தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை : வானிலை மையம் அலெர்ட்!

  இரண்டு மாதங்களுக்கு பிறகு கோவை குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்ததால் குடும்பத்துடனும் மற்றும்  பள்ளி விடுமுறையை குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் அனுபவித்து வருகின்றனர்

  செய்தியாளர் – தொண்டாமுத்தூர் சுரேஷ்

  Published by:Musthak
  First published:

  Tags: Coimbatore