Home /News /tamil-nadu /

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: பங்களாவை பற்றி துல்லியமாக தெரிந்த அதிமுக பிரமுகர் சஜீவனிடம் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: பங்களாவை பற்றி துல்லியமாக தெரிந்த அதிமுக பிரமுகர் சஜீவனிடம் விசாரணை

சஜீவன்

சஜீவன்

ஜெயலலிதா ,சசிகலா ஆகியோரைத் தவிர கோடநாடு வீட்டில் எந்தெந்த இடத்தில் என்னென்ன பொருட்கள்,  மரச்சாமான்கள் இருக்கிறது என்பதை மிக துல்லியமாக தெரிந்த நபர் சஜீவன்.

கோடநாடு கொலை,  கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் சஜீவனிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில்  தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு  விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது. ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் சென்னையில் சசிகலாவிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு  விசாரணை மேற்கொண்டனர்.  சசிகலாவிடம் இருதினங்கள் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு தனிப்படை போலீசார் கோவை திரும்பினார்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கில் அதிமுக வர்த்தக அணியைச் சேர்ந்த சஜீவனிடம்  தனிப்படை போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலை 11 மணிக்கு துவங்கிய விசாரணை 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

கோடநாடு பங்களாவை பொறுத்த வரை மிக நுட்பமாக அனைத்து விசயங்களும் தெரிந்தவர் சஜீவன். ஜெயலலிதா உயிருடன் இருந்தபொழுது கொடநாடு பங்களாவில் உட்புற அலங்கார பணிகள், மரவேலைப்பாடுகள் அனைத்தையும் முன்னின்று கவனித்துக் கொண்டவர் சஜீவன். ஜெயலலிதா ,சசிகலா ஆகியோரைத் தவிர வீட்டில் எந்தெந்த இடத்தில் என்னென்ன பொருட்கள்,  மரச்சாமான்கள் இருக்கிறது என்பதை மிக துல்லியமாக தெரிந்த நபர் அவர்.

இதையும் படிங்க: ஜூனியர்களை ரேகிங்.. வைரலாக பரவிய வீடியோ: 12ம் வகுப்பு மாணவர்கள் சஸ்பெண்ட்

மேலும் கோடநாடு கொலை , கொள்ளை சம்பவம் குறித்த விசாரணை விறுவிறுப்பாக  நடைபெற்றுக்கொண்டு இருந்தபோதே  அவருக்கு அதிமுக வர்த்தக அணியில்  எடப்பாடி பழனிச்சாமி மாநில அளவிலான பொறுப்புகளும் வழங்கியிருந்தார்.  எடப்பாடி பழனிச்சாமியின் குடும்பத்தினருடன் சஜீவன் நெருக்கம் காட்டி வந்த நிலையில் தற்போது அவரிடம் நடத்தப்படும் விசாரணை முக்கியத்துவம்  வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

மேலும் படிக்க: Kodaikanal: கொடைக்கானலில் 50க்கும் மேற்பட்ட தற்காலிக நீர்வீழ்ச்சிகள் - சுற்றுலா பயணிகள் மெய்சிலிர்ப்பு..


மேலும் சசிகலாவிடம் விசாரணை நடத்திய பின்னர் முதல் நபராக சஜீவனை தனிப்படை போலீசார் அழைத்து விசாரணை நடத்துவதும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆறு குட்டி ,அவரது மகன் அசோக் ,தம்பி மகன் பாலாஜி மற்றும் உதவியாளர் ஆகியோரிடமும், அதிமுக அம்மா பேரவை இணைச் செயலாளர் அனுபவ் ரவியிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். இந்நிலையில் தற்போது சஜீவன் தனிப்படை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Murugesh M
First published:

Tags: Jayalalitha, Kodanadu estate

அடுத்த செய்தி