முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கோடநாடு கொலை கொள்ளை வழக்கு - முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் 3-வது நாளாக விசாரணை

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு - முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் 3-வது நாளாக விசாரணை

பூங்குன்றன்

பூங்குன்றன்

Kodanad |கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக  கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்று 3-வது நாளாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில்  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நபர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் ஏப்ரல் 29,30 ஆகிய  இரு தினங்கள் 18 மணி நேரம் விசாரணையானது நடத்தப்பட்டது.

இதனையடுத்து  முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டியின் உதவியாளர் நாராயணசாமியிடம் கடந்த மே 2 ம் தேதி விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் 3 வது நாளாக ஜெயலலிதாவின் உதவியாளர்  பூங்குன்றனிடம் விசாரணையானது நடத்தப்படுகிறது. பூங்குன்றன் விசாரணைக்காக கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்கு காலை 10.30 மணி அளவில் விசாரணை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கோடநாடு பங்களாவுக்கு யாரெல்லாம் வந்து செல்வார்கள் , அங்கு என்னென்ன ஆவணங்கள் வைக்கப்பட்டிருக்கும் என்பது குறித்து பூங்குன்றனிடம் விசாரணையானது நடத்தப்பட்டது. மேலும் கோடநாடு வழக்கு தொடர்பாக கைதான நபர்களிடம்  இருந்து கைப்பற்றப்பட்ட பரிசுப் பொருள்கள் கோடநாடு பங்களாவில் இருந்ததுதானா என்பது குறித்தும் பூங்குன்றனிடம்  விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது. மூன்றாவது நாளாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர்  பூங்குன்றனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

First published:

Tags: Coimbatore, Jayalalitha, Kodanadu estate, Tamil Nadu, Tamil News