ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோவை தொழிலதிபரிடம் ரூ.97 லட்சம் மோசடி.. பிரபல நடிகரின் சகோதரர் கைது

கோவை தொழிலதிபரிடம் ரூ.97 லட்சம் மோசடி.. பிரபல நடிகரின் சகோதரர் கைது

சுனில் கோபி

சுனில் கோபி

பணத்தை திருப்பி கொடுக்காமல் தொழிலதிபர் கிரிதரனுக்கு சுனில்கோபி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கோவையில் நிலம் வாங்கி தருவதாக கூறி தொழிலதிபரிடம் 97 லட்சம் மோசடி செய்ததாக கேரள பா.ஜ.க எம்.பி. சுரேஷ் கோபியின் சகோதரர் சுனில் கோபி என்பவரை கோவை போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கிரிதரன். இவரிடம் மதுக்கரை அருகே  மாவுத்தம்பதி  பகுதியில் 4.52  ஏக்கர் நிலம் விற்பனைக்கு இருப்பதாக கூறி கேரளாவை சேர்ந்த சுனில்கோபி கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  அணுகியுள்ளார். நிலம் பிடித்து போகவே முன்பணமாக 97 லட்ச ரூபாய் பணத்தை சுனில்கோபி அவரது நண்பர்கள் சிவதாஸ் மற்றும் ரீனா ஆகியோரது வங்கி கணக்குகளில் 97 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார்.

Also Read: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

இந்நிலையில் அந்த  நிலத்தின் சொத்து ஆவணங்களை சரி பார்த்த போது அதில் வில்லங்கம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்துதொழிலதிபர் கிரிதரன், சுனில்கோபியை அணுகிய போது பணத்தை ஒரு மாதத்தில் திருப்பி கொடுத்து விடுவதாக உறுதியளித்துள்ளார். ஆனால் பணத்தை திருப்பி கொடுக்காமல் இருக்கவே , இது குறித்து மீண்டும் கேட்ட போது தொழிலதிபர் கிரிதரனுக்கு சுனில்கோபி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது. இதனையடுத்து  சுனில் கோபி ,  சிவதாஸ், ரீனா ஆகிய பேர் மீது கிரிதரன் கோவை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த கோவை மாவட்ட குற்றபிரிவு போலீசார், கூட்டுசதி, மோசடி, நம்பிக்கை மோசடி, தவறான ஆவணங்களை தயாரித்தல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து தனிப்படை போலீசார் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இருந்த சுனில்கோபியை  கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும்  சிவதாஸ் , ரீனா ஆகியோரை தேடி வருகின்றனர்.

Also Read: நெல் கொள்முதல் செய்ய விவசாயிடம் லஞ்சம்.. கையும் களவுமாக பட்டியல் எழுத்தாளர் கைது

கைது செய்யப்பட்ட சுனில் கோபி கேரள மாநிலத்தை சேர்ந்த நடிகரும், பாஜக எம்.பியுமான சுரேஷ் கோபியின் இரண்டாவது  சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை குற்றபிரிவு போலீசார்  இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சுனில் கோபி கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Published by:Ramprasath H
First published:

Tags: Arrest, Coimbatore, Crime News, Fraud, Police, Property