’மக்கள் நலன் காப்பவர்களை தெரியும்னு சொல்றதுதான் முக்கியம்’ - கோவை தன்னார்வலர் எட்வினை பாராட்டிய கமல்ஹாசன்

கமல்ஹாசன்

எட்வின் தன்னார்வலராக கொரொனா தொற்று உச்சத்தில் இருந்த  நேரத்தில் அரசு மருத்துவமனையில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.

  • Share this:
கோவையைச் சேர்ந்த தன்னார்வலர் எட்வின், கொரொனா தொற்று நேரத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக  மக்கள் நீதி மய்யம்  கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காணொலிக் காட்சி மூலமாக அவரை  பாராட்டினார் .

கோவை ஆர்.எஸ்.புரம்  பகுதியைச் சேர்ந்தவர் எட்வின். நடனபயிற்சி பள்ளி நடத்தி வரும் எட்வின் , தன்னார்வலராக கொரொனா தொற்று உச்சத்தில் இருந்த  நேரத்தில் அரசு மருத்துவமனையில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தார். தொற்று ஏற்பட்டவர்கள், அவர்களின் அட்டென்டர்களுக்கு உணவு வாங்கி கொடுப்பது, ஆக்ஸிஜன் வசதி செய்து கொடுப்பது போன்ற தேவையான உதவிகளை செய்து கொடுத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் நேற்று காணொலி காட்சி மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் , எட்வினிடம் பேசினார். எட்வினுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்த கமல்ஹாசன், பெரிய பணக்காரர்களை எங்களுக்கு தெரியும் என்பதை விட உங்களை போன்ற மக்கள் நலம் பேண முன்நிற்பவர்களை எங்களுக்கு தெரியும் என்பதுதான் முக்கியம் என கமல்ஹாசன் தெரிவித்தார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: