முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கொடநாடு விவகாரத்தில் மறுவிசாரணை வேண்டும் - மார்க்ஸிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

கொடநாடு விவகாரத்தில் மறுவிசாரணை வேண்டும் - மார்க்ஸிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

கே.பாலகிருஷ்ணன்

கே.பாலகிருஷ்ணன்

கொடநாடு விவகாரம் தொடர்பாக மறுவிசாரணை நடத்தப்படவேண்டும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு  கூட்டம் இரண்டு நாட்களாக நடைபெற்றது. இரண்டாவது நாளான இன்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கு பின்னர் தீர்மானங்கள் குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது அவர், ‘மத்திய அரசு நாளுக்கு நாள் அனைத்து மக்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது எனவும் மோடி அரசின் குற்றப்பத்திரிகைத் தாக்கல் என்ற நிகழ்ச்சியினை மாநிலம் முழுவதும் 1,000 மையகங்ளில் நடத்த முடிவு செய்துள்ளோம் எனவும் அதில், மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களுக்கு விளக்க இருக்கின்றோம் என தெரிவித்தார்.

மேலும் அகில இந்திய அளவில் சிபிஎம் கட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி செப்டம்பர் மாதம் 10,000 மேற்பட்ட வீடுகளில் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ளபடும் எனவும் விவசாயிகள் பிரச்சினை, பெகாசஸ், பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மக்களுக்கு திண்ணைப் பிரச்சாரத்தில் விளக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தடுப்பூசி விவகாரத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு நியாயமாக நடத்து கொள்வில்லை எனவும் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனே திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றபட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் தமிழக அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் என பல இடங்களில் பணியில் உள்ள ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தம் செய்ய வேண்டும் எனவும் எனவும் தீர்மானம் நிறைவேற்றபட்டதாக தெரிவித்தார். தமிழகத்தில் தனது செயல்பாடுகளால் பதட்டத்தை உருவாக்க பா.ஜ.க முயல்கின்றது எனவும் மத்திய அமைச்சர் தலைமையில் மக்கள் ஆசி யாத்திரை என்ற பெயரில்  மத பதட்டத்தை உருவாக்கும் பா.ஜ.கவை  கண்டிப்பதாகவும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கலாம் என்ற முற்போற்கான நடவடிக்கைகளை விமர்சிக்கின்றோம் என்ற பெயரில் சமூக நீதியை எதிர்த்து பா.ஜ.க இயங்குகின்றது எனவும் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் சிறு, குறு, தொழில் முனைவோருடன் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் தமிழகத்தில் டிசம்பர் மாதம் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சித் தலைவர், மேயர் உள்ளிட்ட பதவியிடங்களுக்கு நேரடியாகத் தேர்தல் நடத்தும் வகையில் மாநில அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கோவை ஓட்டர்பாளையம் வீடியோ விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தேவையற்ற சாதிய பதட்டத்திற்கு கோவை மக்கள் இடம்  கொடுக்க கூடாது எனவும் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவத்தில் அ.தி.மு.க ஆட்சியில் இருக்கும் பல்வேறு தகவல்கள் அதில் தொடர்புடையவர்களால் வெளியானது எனவும் ஆனால் அதில் தொடர்பு இருப்பவர்களை  வெளியில் விடாமல் அப்போதைய ஆட்சியாளர்கள் சிறையிலேயே அடைத்து வைத்து இருந்தனர் என தெரிவித்த அவர் கொடநாடு சம்பவத்தில் தொடர்புடைய சாட்சிகள் தற்போது சொல்ல கூடிய தகவல்களின் அடிப்படையில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன், அவரது யாத்திரையின் போது திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் மீது முழுக்க முழுக்க அபாண்டமாக, தேவையற்ற விவாதத்தை முன்வைக்கின்றார் எனவும் சமூகத்தை சொல்லி சாதி அடிப்படையிலான அரசியலை அவர் கைவிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பா.ஜ.க வுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பது தேர்தலில் வெற்றி பெற அல்ல எனவும் பாதுகாப்புடன் அரசியல் செய்யும் கட்சியாக அதிமுக மாறிப்போனது வேதனைக்குரியது எனவும் தெரிவித்தார். பெகாசஸ் உளவு நிறுவனங்கள் செயல்பாட்டிற்கு 900 கோடி ரூபாய் மத்திய அரசால்  செலவு செய்யப்பட்டுள்ளது. அரசின் உதவி இல்லாமல், அரசு இல்லாமல் வேறு யாரும் ஒட்டு கேட்டு இருக்க முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெகசாஸ் மூலம் நீதிபதி, அமைச்சர்கள், அதிகாரிகள் என எல்லாரையும் ஒட்டுக்கேட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது மாதிரியான பிரச்சினைக்கு போராடாமல் வேறு எதற்கு எதிர்கட்சிகள் போராடும் எனவும் நாடாளுமன்றத்தில் பிரச்சினையை கிளப்ப எதிர்கட்சிகளுக்கு உரிமை உண்டு எனவும் தெரிவித்தார். பெகாசஸ் விவகாரத்தில் பதில் சொல்லாமல்  நாடாளுமன்றத்தில் மற்ற மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

First published:

Tags: Coimbatore