கோடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணை
கோடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணை
ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன்
கோடநாடு பங்களாவில் உள்ள நடைமுறைகள் தொடர்பாகவும் , அங்கு எந்த மாதிரியான பொருட்கள், ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்தது என்பது குறித்து பூங்குன்றனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் 2-வது நாளாக ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இதுவரை விசாரிக்கப்பட நபர்களை அழைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் முன்னிலையில் இந்த விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது. அதிமுக முக்கிய புள்ளிகள் பலர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
நேற்று 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முழுமை அடையததால் இன்று இரண்டாவது நாளாக விசாரணையானது நடைபெறுகின்றது. காலை 10.30 மணி அளவில் இரண்டாவது நாள் விசரணைக்கு பூங்குன்றன் ஆஜரானார். அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடநாடு பங்களாவில் உள்ள நடைமுறைகள் தொடர்பாகவும் , அங்கு எந்த மாதிரியான பொருட்கள், ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரர் சிபியிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளது குறிப்பிடதக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.