உக்ரைனில் நிற பிரச்சினை இருக்கின்றது , தோலை பார்த்து இந்தியர்களை ரயிலில் ஏற்றுவதில்லை எனவும் தற்போது ரஷ்யா வழியாக மாணவர்களை அழைத்து வரும் முயற்சி தூரம் அதிகம் என்றாலும் பாதுகாப்பானது என ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கிவாசு தேவ் தெரிவித்தார்.
மண்வளத்தை பாதுகாக்க வேண்டும் என சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கிவாசுதேவ் 27 நாடுகளில் 30 ஆயிரம் கி.மீ மோட்டார் சைக்கிளில் பயணிக்க இருக்கின்றார். இதற்காக அவர் இன்று கோவையில் இருந்து லண்டன் கிளம்பினார்.
இது தொடர்பாக கோவை வாலாங்குளத்தின் கரைப்பகுதியில் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது மண்ணை காப்பாற்ற " மண் காப்போம்" என்பதை உலகம் முழுவதும் சேர்ந்து மக்கள் இயக்கம் நடத்த இருப்பதாக தெரிவித்தார். உலக விஞ்ஞானிகள் இனி வரும் காலங்களில் தோராயமாக 60 முதல் 80 பயிர்கள் மட்டும் இருக்கும் என்கின்றனர் எனவும், 2045 ம் ஆண்டு உணவு தயாரிக்கும் சக்தி உலகம் முழுவதும் 40 சதவீதம் குறையும் என தெரிவிப்பதாக கூறினார்.
மக்கள் தொகை 9 பில்லியனுக்கு மேல் வரும் போது, மக்கள் தொகைக்கான உணவு உற்பத்தி குறைந்து இருக்கும் எனவும்,இப்போது இதை மீட்டெடுக்க வாய்ப்பு இருக்கின்றது எனவும், சில பாலிசி மாற்றம் மூலம் மண்வளத்தை பாதுகாக்க முடியும் என தெரிவித்தார். உலகம் முழுவதும் உள்ள 730 அரசியல் கட்சியினருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி இருக்கின்றேன் என்றும், மண், மண்ணில் உள்ள உயிர்கள் குறித்து அவர்களது தேர்தல் வாக்குறுதிகளில் ஏதேனும் ஒன்றை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறேன் எனவும் தெரிவித்தார்.
இந்த மண்காப்போம் இயக்கத்தில்3 தன்னார்வ அமைப்புகள் ஈஷாவுடன் இணைந்து இந்த பணிகளை மேற்கொள்கின்றன எனவும், இசை, சினிமா, விளையாட்டு என அனைத்து துறை வல்லுனர்களும் இதில் இணைந்து இருப்பதாகவும் தெரிவித்தார். வரும் 21ம் தேதி லண்டனில் துவங்கி, மண்வளத்தை பாதுகாக்க வேண்டும் என சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த 100 நாட்களில் 27 நாடுகளுக்கு 30 ஆயிரம் கி.மீ தூரம் மோட்டார் சைக்கிளில் பயணிக்க இருக்கின்றேன் எனவும் இந்த நேரத்தில்பனி, வெயில் , மழை, போர் என அனைத்து சவால்களையும், சூழல்களையும் கடந்து இந்த பயணம் இருக்கும் எனவும் ஜக்கிவாசுதேவ் தெரிவித்தார்.
கடந்த 2 வருடத்தில் எங்கே போனாலும் எல்லாருக்கும் இந்த மண் பாதிப்பு இருப்பது தெரிகின்றது எனவும், ஆனால் பூனைக்கு மணி கட்ட ஒரு முட்டாள் தேவை என்பதற்காக நான் இதை செய்கின்றேன் எனவும் ஜக்கிவாசுதேவ் தெரிவித்தார்.
உக்ரைனில் போர் காரணமாக சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களுக்கு ஈஷா தன்னார்வலர்கள் மத்திய அரசுடன் சேர்ந்து உதவி வருகின்றோம் எனவும், தங்குமிடம், போக்குவரத்து போன்றவை அவர்களுக்கு ஏற்படுத்தப்படுகின்றது எனவும் தெரிவித்தார். தற்போது உக்ரைனில் ஏற்பட்டு இருக்கும் கஷ்டமான நிலையில், ரஷ்யாவுடன் பேசி இந்தியர்களை வெளியேறுவதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.
உக்ரைனில் நிற பிரச்சினை இருக்கின்றது, தோலை பார்த்து இந்தியர்களை ரயிலில் ஏற்றுவதில்லை என தெரிவித்த அவர்,ரஷ்யா வழியாக அங்கு சிக்கி இருப்பவர்களை கொண்டு வரும் முயற்சி நல்ல முயற்சி எனவும், தூரம் அதிகம் என்றாலும் பாதுகாப்பானது எனவும்,இன்னும் 11 ஆயிரம் பேருக்கு மேல் அங்கிருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
Also read... உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வினர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொள்ளலாமா? கி.வீரமணி கேள்வி
நீர்நிலைகள் நன்றாக இருக்க மண்ணை காக்க வேண்டும் என தெரிவித்த அவர் மண்ணில் இருக்கும் உயிர்சத்து தற்போது 0.68 ஆக இருக்கின்றது, இதை 8 முதல் 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தெரிவித்தார்.உயிர்சக்தி வந்து விட்டால் 100 லிட்டர் நீரில் நடைபெறும் விவசாயம் 30 லிட்டரில் செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என அறிவுரை கூறாதது ஏன் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, உள்ளாட்சி தேர்தல் என்பது அரசியல் தேர்தல் கிடையாது, தனி நபர்களின் மீது கொண்டுள்ள நம்பிக்கயால் அந்த ஊரில் யார் வர வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் எனவும் ஈஷா மைய நிறுவனர் ஜக்கிவாசுதேவ் தெரிவித்தார். வாலாங்குளத்தின் கரையில் கூடியிருந்த ஏராளமான ஈஷா தன்னார்வலர்களும், மாணவர்களும் ஜக்கிவாசுதேவ்விற்கு வாழ்த்து சொல்லி வழியனுப்பி வைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Isha yoga centre, Jaggi vasudev