ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வேதனை அளிக்கிறது - அண்ணாமலை

நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வேதனை அளிக்கிறது - அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வேதனை அளிக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இதுதொடர்பாக கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, நீட் தேர்வு தற்கொலை மிகப்பெரிய துயர சம்பவம். அதனால், எங்களுக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு மாணவர்களுக்கு எதிரானது கிடையாது. தமிழகத்தில் மாணவர்கள் முன்னிலை மதிப்பெண்கள் வாங்கி உள்ளார்கள். நீட் தேர்வு சமூக நீதியை நிலைநாட்டும் தேர்வு.

திமுகவினர் நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். ஆளும் அரசு நீட் தேர்வில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். நீட் வராது வராது என பொறுப்பான ஆளும் அரசு பேசுவது சரியா??

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் பேசி வருகின்றோம். இந்த கூட்டணி வெற்றி கூட்டணி அமையும். பாஜக வலுவான வேட்பாளர்களை நிற்க வைப்போம்..

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக உள்ளாட்சி தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் குறித்த கேள்விக்கு மக்களுக்கு நல்லது நினைப்பவர்களும் , நல்லது செய்ய நினைப்பவர்களும் யாரக இருந்தாலும் வரல்லாம்.

மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலை ஏன் இரண்டு கட்டமாக நடத்த வேண்டும்??  எதிர்கட்சி தலைவர் எடப்பாடி தேர்தல் குறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட காரணங்கள் முக்கியமானது தான். நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம்..

தமிழக அரசு விதித்த அனைத்து கட்டுபாடுகளை மதித்து பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. லஞ்ச ஒழிப்பு சோதனை காழ்ப்புணர்ச்சி காரணமாக மாதம் ஒருவராக முன்னாள் அமைச்சர்கள் மீது நடத்தப்படும் சோதனையாக பார்க்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Annamalai, BJP, Neet