பிணம் எரிப்பவர்களையும் கோவில் கருவறைக்குள் அனுமதித்த ஈஷா!

ஈசா

, ஈஷா பராமரிக்கும் நஞ்சுண்டாபுரம் சுடுகாட்டை சென்று பார்த்தால் அதை சுடுகாடு என்றே நம்ப முடியாது. காரணம், அந்த இடம் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று மரங்களும், செடி கொடிகளும், புல் தரைகளோடும் காட்சியளிக்கிறது

 • Share this:
  சுட்டுகாட்டில் பணியாற்றுவோர் என்னும் தாழ்வு நிலை நீங்கி மகிழ்ச்சியுடன் இருப்பதாக ஈசா  அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்படும் நஞ்சுண்டாபுரம் சுடுகாட்டில்  பணியாற்றுபவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

  சுடுகாடு என்றாலே குப்பைகளும், சாம்பல் குவியல்களும், அங்கிருந்து கிளம்பும் புகைகளுமே நம் நினைவுக்கு வரும். ஆனால், ஈஷா பராமரிக்கும் நஞ்சுண்டாபுரம் சுடுகாட்டை சென்று பார்த்தால் அதை சுடுகாடு என்றே நம்ப முடியாது. காரணம், அந்த இடம் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று மரங்களும், செடி கொடிகளும், புல் தரைகளோடும் காட்சியளிக்கிறது.  அந்த இடத்தை பராமரிக்கும் நிர்வாக பொறுப்பில் இருக்கும் சுவாமி அபிபாதாவிடம் பேசிய போது, “இந்த இடத்துக்கு சத்குரு ‘காயந்த ஸ்தானம்’னு பேரு கொடுத்துருகாங்க. ’காய’ னா உடல்; ’அந்த’ னா முடிவு; ‘ஸ்தானம்’ னா இடம். அதாவது, உடல் முடிவு பெறும் இடம்னு இதுக்கு பொருள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஒருத்தர் உயிரோட இருக்கும்போது மட்டுமில்லாம சாகும் போது கூட ஒரு ஆன்மீக வாய்ப்பை கொடுக்குறதுக்காக நாங்க இந்த சுடுகாடுகள எடுத்து பராமரிச்சுக்கிட்டு வர்றோம்.

  இதையும் படிங்க: கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு - இவர் யார் தெரியுமா?


  2010-ல் இந்த நஞ்சுண்டாபுரம் சுடுகாட்ட எங்க பராமரிப்புல எடுத்துக்கிட்டோம். எங்களோட செயல்பாடுகள் பிடிச்சு போயி மாநகராட்சியில இருந்து அடுத்தடுத்து நிறைய சுடுகாடுகள எங்களுக்கு கொடுத்தாங்க. இப்போ, கோயம்புத்தூர்ல 12 சுடுகாடு, சென்னையில 4, நாமக்கல், நெய்வேலியில தலா ஒண்ணுனு மொத்தம் இப்போ 18 சுடுகாடுகள மெயிண்டைன் பண்ணிக்கிட்டு இருக்கோம். இந்த இடத்த நாங்க கோவில் மாதிரி பார்த்துக்குறோம். அதுனால, ஆண்கள் மட்டுமில்லாம பெண்கள் கூட பயமில்லாம இங்க வந்துட்டு போறாங்க” என்று கூறினார்.  சுடுகாட்டை சுத்தமாக பராமரிப்பது, சுற்றுச்சூழலை மேம்படுத்துவது போன்ற அம்சங்களை தாண்டி, அங்கு பணியாற்றும் மனிதர்களின் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்களை கேட்ட போது தான் அதிகம் வியப்பாக இருந்தது.

  “இவங்க யாராவது ஒரு வீட்டுக்கு போனா, இவங்க போனதுக்கு அப்பறம் அந்த இடத்த தண்ணீர் ஊத்தி கழுவி விடுவாங்களாம். இந்த துயரமான மனநிலையில இருந்து அவங்கள கொஞ்சம் கொஞ்சம் வெளிய கொண்டு வர முயற்சி எடுத்தோம். ஒரு பெளர்ணமி நாள்ல, அவங்கள தியானலிங்க கருவறைக்குள்ள கூட்டிட்டு போனோம். எல்லாரு கையிலயையும் பால் குடத்த கொடுத்து, மேலே ஏறி லிங்கத்துக்கு அர்ப்பணிக்க சொன்னோம். அப்போ அவங்க உடம்பெல்லாம் நடு நடுங்கி போச்சு.

  வெளிய வந்தததுக்கு அப்பறம், கண்ணுல தண்ணீர் சொட்ட நின்னாங்க. ‘சாமி, நாங்க நாள் முழுக்க சுடுகாட்டுல மட்டும் தான் இருப்போம். கோவிலுக்கெல்லாம் போற பழக்கம் இல்ல. அங்க போனாலும் எங்கள உள்ள விடமாட்டாங்க. ஆனா, இன்னைக்கி எங்க கையிலேயே லிங்கத்துக்கு பால் அபிஷேகம் பண்ண வச்சுட்டீங்க. இந்த மாதிரி ஒரு அனுபவத்த நாங்க எங்க வாழ் நாள்ல இதுவரைக்கும் அனுபவச்சு இல்லனு” சொல்லி கண்ண தொடச்சுகிட்டாங்க” என்று உணர்ச்சி பூர்வமான சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார் சுவாமி அபிபாதா.

  மேலும் படிக்க: ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்படும் மணல் - சினிமாவை மிஞ்சும் பின்னணி!


  அங்கு இருக்கும் ஊழியர்களிலேயே இளம் வயதில் இருக்கும் மாரிமுத்துவுடன் பேசும் போது, “மொதல எல்லாம் மயானத்துக்கு போயிட்டு வந்தா, குளிச்சுட்டியா, என்ன தொட வேண்டாம்னு சொல்லி ஃப்ரெண்ட்ஸ்ங்க எல்லாம் தள்ளி நிப்பாங்க. இப்போ அப்படி கெடையாது. என் ஃப்ரெண்ட்ஸ இங்க கூட்டிட்டு வந்து சுத்தி காமிச்சேன். ஈஷால எவ்வளவு சுத்தமா வச்சுகிறாங்க, பாருங்கனு சொன்னே. அதுக்கப்பறம் அவங்க இப்போ என் கூட க்ளோஸா பழகுறாங்க” என்று தெரிவித்தார்.  கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞர் கணேசன் கூறுகையில், “பிரேதத்துல இருந்து ரொம்ப துர்நாற்றம் வருங்க. சொந்தகாரங்களே பக்கத்துல வர தயங்குவாங்க. ஆனா, நாங்க பிரேதத்த எறக்கி வச்சு, எல்லா சடங்குகளையும் முழு மனசோட பண்ணி அந்த உயிர நிறைவா அனுப்பி வைப்போங்க. அது எங்களுக்கும் மனசுக்கு திருப்பி இருக்குங்க” என்றார்.

  மற்றொரு நபரான சம்பத் கூறுகையில், “இங்க எங்கள நல்லா பார்த்துகிறாங்க. மூணு நேரம் சாப்பாடு நல்லா சாப்பிட்டுக்களாங்க. 31-ம் தேதி ஆனா சம்பளம் கரெக்ட்டா கொடுக்குறாங்க. பஸ் ஃபேரும், யூனிஃபார்மும் அவங்களே கொடுக்குறாங்க. ஈஷா நிர்வாகம் நீட்டா இருக்குங்க” என்று தெரிவித்தார்.
  Published by:Murugesh M
  First published: