Home /News /tamil-nadu /

வாக்காளர்களுக்கு திமுகவினர் ஹாட் பாக்ஸ் கொடுக்கிறார்களா? கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ

வாக்காளர்களுக்கு திமுகவினர் ஹாட் பாக்ஸ் கொடுக்கிறார்களா? கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ

ஹாட் பாக்ஸ்

ஹாட் பாக்ஸ்

coimbatore : கோவை நகரில் வாக்காளர்களுக்கு திமுகவினர் ஹாட் பாக்ஸ் கொடுப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கோவையில் திமுக, அதிமுக , பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸ் கொடுத்து திமுகவினர் வாக்கு சேகரித்து வருவதாக அதிமுக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

கோவையில், ஹாட் பாக்ஸ்களுடன் வந்த வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையில், கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 70 லாரிகளில் ஹாட் பாக்ஸ்  கொண்டு வரப்பட்டு திமுகவினர்  வாக்காளர்களுக்கு  விநியோகம் செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.

Must Read : ஒரே நாடு, ஒரே தேர்தல் - பாஜக முழக்கத்தை முன்வைக்கிறாரா எடப்பாடி பழனிச்சாமி

இந்நிலையில், சமூக வலைதளங்களில்  வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸ்  கொடுப்பது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. அந்த காட்சிகளில் திமுக கிளை அலுவலகம் ஒன்றின் வாசலில் பொது மக்களுக்கு ஹாட் பாக்ஸ்  கொடுக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.  மற்றொரு வீடியோவில் இருசக்கர வாகனத்தில் ஹாட் பாக்ஸ் மூட்டையை தூக்கி செல்வதும், அவர்களை பின் தொடர்ந்த நபர் செல்போன் மூலம் அந்த காட்சிகளை பதிவு செய்வதை   பார்த்ததும் ஹாட் பாக்ஸ்  மூட்டையுடன் இருக்கும் நபரை இறக்கிவிட்டு விட்டு வேகமாக செல்வதுமான காட்சிகள் பதிவாகியுள்ளன.

 



அவரை பின்தொடர்ந்து சென்று இந்த  காட்சிகளை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக எந்த புகார்களும் வரவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கையில் ஹாட்பாக்ஸூடன் தஅரசியல் கட்சியினர் சுற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Published by:Suresh V
First published:

Tags: Coimbatore, DMK, Local Body Election 2022

அடுத்த செய்தி