Home /News /tamil-nadu /

தேர்வு அறையில் முறைகேடு நடப்பதை தடுக்கும் சாதனம்.. கோவை உதவி பேராசிரியை கண்டுபிடிப்புக்கு காப்புரிமை

தேர்வு அறையில் முறைகேடு நடப்பதை தடுக்கும் சாதனம்.. கோவை உதவி பேராசிரியை கண்டுபிடிப்புக்கு காப்புரிமை

இந்த டிடெக்டர் பயன்படுத்துவதால் மொபைல் ட்ராக்கிங் மற்றும் மொபைல் ரெக்கார்டிங்கை தடுக்க முடியும்.

இந்த டிடெக்டர் பயன்படுத்துவதால் மொபைல் ட்ராக்கிங் மற்றும் மொபைல் ரெக்கார்டிங்கை தடுக்க முடியும்.

இந்த டிடெக்டர் பயன்படுத்துவதால் மொபைல் ட்ராக்கிங் மற்றும் மொபைல் ரெக்கார்டிங்கை தடுக்க முடியும்.

    செல்போன் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கத்தில், கோவையைச் சேர்ந்த உதவி பேராசிரியை கண்டுபிடித்த மொபைல் பக் சாதனத்திற்கு காப்புரிமை கிடைத்துள்ளது.

    தேர்வு அறைகளுக்குள் மாணவர்கள் செல்போன், BLUETOOTH போன்ற தகவல் பரிமாற்ற சாதனங்களை  கொண்டு செல்வதற்கு தடை உள்ளது. இருப்பினும் சில மாணவர்கள் செல்போன்களை ஆசிரியர்களுக்குத் தெரியாமல் மறைத்து தேர்வு அறைக்குள் கொண்டு செல்கின்றனர்.

    இதனால் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதற்காக ஜாமர் போன்ற கருவிகளை பயன்படுத்தி செல்போன் செயல்பாடுகளை தடுத்தால், செல்போன் மட்டுமல்லாமல் அனைத்து இணையதள நெட்வொர்க்குகளும் தடைபடுகிறது.

    இதனால் மற்ற பணிகளும் பாதிக்கப்படும் நிலையில், கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் இயற்பியல் துறை உதவி பேராசிரியையான பிரியதர்ஷினி, தேர்வு அறையில் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க மொபைல் பக் என்ற டிடெக்டரை 2012 ஆம் ஆண்டு கண்டுபிடித்துள்ளார்.  இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது காப்புரிமை கிடைத்துள்ளது.

    இதையும் படிங்க - மதுரையை சேர்ந்த புகைப்படக் கலைஞர் செந்தில் குமரனுக்கு சர்வதேச விருது… முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

    இதுகுறித்து உதவிப் பேராசிரியர் பிரியதர்ஷினி கூறும் போது,

    ஒரு ஆசிரியராக தேர்வறையில் ஏற்படும் பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மொபைல் பக்கை கண்டுபிடித்துள்ளேன். இந்த இன்வென்ஷ்னுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    மேலும் இந்த இன்வென்ஷனை அனைத்து துறைக்கும் பயன்படுத்தும் படியாக கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

    இதையும் படிங்க - 'காமராஜரைப் போல் முழு நல்லவர் ஸ்டாலின்' - நெல்லை கண்ணன் புகழாரம்
    இந்த டிவைஸை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தயாரித்தோம்.முழுக்க முழுக்க நானே முயற்சி செய்து தயாரித்தேன்.இருக்கும் பொருட்களை வைத்தே இதை தயாரித்தேன்.இந்த கண்டுபிடிப்புக்கு கல்லூரியும் எங்கள் துறை சார்ந்தவர்களும் உதவியாக இருந்தனர்.


    இந்த சென்சாரை 5 முதல் 10 மீட்டர் வரை ட்யூன் செய்து கொள்ள முடியும். மாணவர்கள் செல்போன் கொண்டு வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை உறுதிப்படுத்த இந்த கருவி உதவியாக இருக்கும்.


    தேர்வு அலுவலகத்தில் நடைபெறும் பிரச்சனைகளை குறைக்க முடியும்.இந்த டிடெக்டர் பயன்படுத்துவதால் மொபைல் ட்ராக்கிங் மற்றும் மொபைல் ரெக்கார்டிங்கை தடுக்க முடியும். இதன்மூலம் தனி உரிமை தடைபடாது என தெரிவித்தார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Coimbatore

    அடுத்த செய்தி