Home /News /tamil-nadu /

கோவையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் பேரூராட்சி தலைவராக தேர்வு!

கோவையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் பேரூராட்சி தலைவராக தேர்வு!

சுயேச்சை வேட்பாளர்கள் ஒரு அணியாக 9 வார்டுகளில் வெற்றி பெற்றது தமிழகத்தில் மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் மட்டும்தான் என்பது குறிப்பிடதக்கது.

கோவை மாவட்டம் மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் மாற்றம் என்ற பெயரில்  தனி அணியாக நின்று 9 கவுன்சிலர்கள் வெற்றி பெற்று இருந்த நிலையில் இன்று அதன் ஒருங்கிணைப்பாளர் சசிகுமார்  பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்திலேயே சுயேட்சை வேட்பாளர் பேரூராட்சி தலைவராக தேர்வானது இந்த பேரூராட்சியில் மட்டும் என்பது குறிப்பிதக்கது..

கோவை மாவட்டம் மோப்பிரிபாளையம் பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. இதில்  மாற்றம் என்ற பெயரில்  போட்டியிட்ட அணியினர் 9 வார்டுகளை கைப்பற்றி பெருபாண்மை பெற்றனர். சுயேச்சை வேட்பாளர்கள் ஒரு அணியாக 9 வார்டுகளில் வெற்றி பெற்றது தமிழகத்தில் மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் மட்டும்தான் என்பது குறிப்பிடதக்கது.

Also Read : கடைசியில் காய்நகர்த்திய உடன்பிறப்புகள்.. வேதனையில் கூட்டணி கட்சிகள் - சங்கடத்தில் திமுக தலைமை

இந்நிலையில் இன்று நடைபெற்ற பேரூராட்சி தலைவர் தேர்தலில்  மாற்றம் அணியின் ஒருங்கிணைப்பாளர் சசிக்குமார் பேரூராட்சி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். மாற்றம் அணி பெரும்பான்மை பெற்று இருந்த நிலையில், மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவராக  சசிக்குமார் தேர்வு செய்யப்பட்டார். இவரது வெற்றியை  அப்பகுதிமக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

சசிகுமாரின் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர். இந்தத் தகவல் அறிந்த கோவையின் முன்னாள் மேயர் செ.ம.வேலுசாமி நேரடியாக சென்று, மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவராக தேர்வான சசிகுமாரை வாழ்த்தினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்திலேயே சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒருவர், பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் மட்டும்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Esakki Raja
First published:

Tags: Local Body Election 2022

அடுத்த செய்தி