• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கண்காணிப்பு கேமராவில் பதிவான சிறுத்தை..சாம்பர் இன மான்.. - கோவை வனப்பகுதியில் வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு

கண்காணிப்பு கேமராவில் பதிவான சிறுத்தை..சாம்பர் இன மான்.. - கோவை வனப்பகுதியில் வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு

வனவிலங்குகள்

வனவிலங்குகள்

வனப்பகுதிக்குள் நிலவும்  நல்ல சீதோசன நிலை காரணமாக வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

  • Share this:
    கோவை மண்டல வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, மான் உட்பட வனவிலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்து இருப்பது கண்காணிப்பு கேமராக்களின் மூலம் தெரியவந்துள்ளதாக கோவை  வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    கோவை மண்டல வனபகுதியானது 70 ஆயிரம் சதுரடி பரப்பளவு கொண்டது. 8 வனச்சரகங்களாக உள்ள இந்த வனப்பகுதியில்  கோவை,மதுக்கரை, போளுவாம்பட்டி, காரமடை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம்  ஆகிய வனச்சரகங்கள் கேரள வனப்பகுதியின் அருகிலும், சிறுமுகை,மேட்டுப்பாளையம் வனச்சரகங்கள்  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியின் அருகிலும் அமைந்துள்ளது.

    இந்த வனச்சரகங்களில் யானை ,புலி ,சிறுத்தை, கரடி, சாம்பர் இன மான் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளது.சமீபகாலமாக கோவை மண்டல வனப்பகுதியில் காட்டு விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கண்காணிப்பு கேமரா ஆய்வுகள் மூலம் தெரியவந்து இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    யானை


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களில. பதிவாகியுள்ள காட்சிகளையும் வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். வனவிலங்குகளை பாதுகாக்க வேட்டை தடுப்பு காவலர்களும், வனப்  பணியாளர்களும் இரவுபகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வனக் குற்றங்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதன்   காரணமாகவே  கோவை மண்டல வனப்பகுதியில் காட்டு விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    மான்


    குறிப்பாக மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரகங்கள் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை ,செந்நாய், அரிய வகையான கழுதைப்புலி ஆகியவற்றின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மண்டல வனப்பகுதியில்  பொருத்தியுள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதன்  மூலம்  தெரியவந்துள்ளதாகவும்,  மேலும் வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியும், வனப்பகுதிக்குள் நிலவும்  நல்ல சீதோசன நிலைதான்  வன விலங்குகள் எண்ணிக்கை உயர காரணம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: