கள்ளக்காதலுக்கு இடையூறு குழந்தையை கொன்று நாடகமாடிய தாய் - பெண் குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்

மாதிரிப்படம்

தகாத கள்ள உறவுக்காக குழந்தையை கொன்று தாய் நாடகமாடியது விசாரணையில் அம்பலமானதால் பரபரப்பு.

 • Share this:
  பொள்ளாச்சி அருகே 3 வயது பெண் குழந்தையை கொன்ற தாய் சரோஜினி கைது செய்யப்பட்டுள்ளார். 

  பொள்ளாச்சி அருகே உள்ள  மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மணிகண்டன்(22), இவர் நேற்று முன்தினம் 14ம் தேதி காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில், அவரது 3 வயது பெண் குழந்தை நிவன்யாஸ்ரீக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி மணிகண்டனின் மனைவி சரோஜினி(21), வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

  குழந்தையின் உயிரிழப்பில் சந்தேகம் ஏற்பட்டதால் மருத்துவர்கள் ஆனைமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, குழந்தையின் தாய் சரோஜினியிடம் விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
  இதையடுத்து, குழந்தையின் தந்தை மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து ஆனைமலை போலீசார் விசாரித்து வந்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், பிரேத பரிசோதனையில், குழந்தையின் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.பின்னர், தாய் சரோஜாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சர்க்கார்பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த பொம்மன்(23) என்ற நபருடன் சரோஜினிக்கு பழக்கம் ஏற்பட்டதும், தகாத கள்ள உறவுக்கு இடையூறாக இருந்ததால், குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று விட்டு நாடகமாடியது தெரியவந்தது.

  இதை தொடர்ந்து, சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு, கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு, சரோஜினி மற்றும் கள்ளக்காதலன் பொம்மன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கை யில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தையை தாய் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர்: ம.சக்திவேல் (பொள்ளாச்சி)


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: