Home /News /tamil-nadu /

கோவை மதுக்கரை மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 7.61 ஏக்கர் நிலம் மீட்பு

கோவை மதுக்கரை மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 7.61 ஏக்கர் நிலம் மீட்பு

கோவிலுக்கு சொந்தமான 7.61 ஏக்கர் நிலம் மீட்பு

கோவிலுக்கு சொந்தமான 7.61 ஏக்கர் நிலம் மீட்பு

கோவை மாவட்டம்  மதுக்கரை மார்க்கெட் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு  சொந்தமான நிலம் உள்ளது.

  • News18
  • Last Updated :
கோவை மாவட்டம் மதுக்கரை மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான  25 கோடி ரூபாய் மதிப்பினாலான 7.61 ஏக்கர் கோவில் நிலத்தை இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் மீட்டனர்.

கோவை மாவட்டம்  மதுக்கரை மார்க்கெட் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு  சொந்தமான நிலம் உள்ளது. 25 கோடி மதிப்புடைய 7.61 ஏக்கர் கோவில்  நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த முத்துவேலப்பன் மற்றும் சாமிநாதன் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தனர்.

இதுகுறித்து எழுந்த புகார் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை கோவை உதவி ஆணையாளர் விஜயலட்சுமி தலைமையில், துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

Also read... பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு பயத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படவில்லை - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

அப்போது அவர்கள் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தது உறுதிப்படுத்தபட்டது. இதையடுத்து 7.61 ஏக்கர் கோவில்  நிலத்தை மீட்ட அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் அதனை திருக்கோவில் செயல் அலுவலர் சரண்யா வசம் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த நிலத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என அறிப்பு பலகைகள் வைக்கப்பட்டது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Coimbatore

அடுத்த செய்தி